இந்தியாவில் பிளாஸ்மா சிகிச்சை ஓரளவுக்குத்தான் பயன்பட்டது: ஆய்வில் கண்டுபிடிப்பு

By பிடிஐ

இந்தியாவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் கடுமையான நோய் அல்லது அதிக உயிரிழப்புகளைக் குறைப்பதில் மிகமிகக் குறைந்த அளவில்தான் பிளாஸ்மா சிகிச்சையால் பயன் கிடைத்தது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஏப்ரல் முதல் ஜூலை வரை இந்தியாவில் மிதமான கோவிட் பாதிப்பால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட 464 பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்று பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் (பி.எம்.ஜே) தெரிவிக்கிறது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) மற்றும் தமிழகத்தின் தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் ஆகியவை இணைந்து இந்த ஆய்வை நடத்தின.

இதுகுறித்து மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது:

''ஆய்வில் பங்கேற்ற, கரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகள் குறைந்தது 18 வயதுடையவர்களாக இருந்தனர். இவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை மூலம் ஏழு நாட்களுக்குப் பிறகு, மூச்சுத் திணறல் மற்றும் சோர்வு போன்ற அறிகுறிகளைக் குறைக்க முடிந்ததைக் காண முடிந்தது. மிதமான கோவிட்-19 பாதிப்புடைய நோயாளிகளுக்குச் சாத்தியமான சிகிச்சையாக இது ஓரளவுக்கு வரையறுக்கப்பட்ட செயல்திறனை மட்டுமே காட்டியது.

24 மணி நேர இடைவெளியில், நிலையான கவனிப்புடன் பிளாஸ்மா சிகிச்சையை வயது வந்தோருக்கான 239 நோயாளிகள் பெற்றனர். அதே நேரத்தில் பிளாஸ்மா சிகிச்சை இல்லாமல் 229 நோயாளிகளைக் கொண்ட கட்டுப்பாட்டுக் குழு ஒன்றும் நிலையான கவனிப்புகளைப் பெற்றது.

ஆனால், 41 நோயாளிகள் அல்லது 18 சதவீதம் பேர் கொண்ட சாதாரண கட்டுப்பாட்டுக் குழுவை ஒப்பிடும்போது ஒரு மாதத்திற்குப் பிறகு, பிளாஸ்மா சிகிச்சை பெற்றவர்களில் 44 நோயாளிகள் அல்லது 19 சதவீதம் பேர் கடுமையான நோய்க்குத் தள்ளப்பட்டனர் அல்லது ஏதோ ஒரு காரணத்தினால் அவர்கள் உயிரிழந்துவிட்டனர்.

பிளாஸ்மா சிகிச்சைக்குப் பிறகு கடுமையான கோவிட்-19க்கு நோய்க்குறைப்பில் முன்னேற்றமில்லை. அதே நேரம் பிளாஸ்மா சிகிச்சைக்குப் பிறகு உயிரிழப்புகளும் நேர்ந்துள்ளன.

பங்கேற்பாளர்கள் தங்கள் கைகள் மூலம் சுறுசுறுப்பான பிளாஸ்மாவைப் பெற்றனர். அவர்களுக்குக் கூடுதலாக சிறந்த தரமான பராமரிப்பு மூலம் 24 மணி நேர இடைவெளியில் பிளாஸ்மா முறையில் ரத்தம் மாற்றப்பட்டது,

முன்னர் நடத்தப்பட்ட அவதானிப்பு ஆய்வுகள், பிளாஸ்மாவைப் பெறுபவர்களுக்கு மருத்துவ நன்மைகளை பரிந்துரைக்கின்றன. ஆனால், இந்தியாவில் கோவிட்-19 நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்ட வகையில் அவர்கள் உயிரிழப்பிலிருந்து தப்பியதைப் பற்றி ஏதும் கண்டறிய முடியவில்லை என்பதால் சோதனைகள் முன்கூட்டியே நிறுத்தப்பட்டன.

குறைவான ஆய்வகத் திறன் கொண்ட அமைப்புகளில், மிதமான கோவிட்-19 உடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு 28 நாளில் உயிரிழப்பு அல்லது கடுமையான நோய்க்கான பாதிப்பை பிளாஸ்மா குறைக்காது என்று புதிய ஆய்வு காட்டியுள்ளது''.

இவ்வாறு மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

2 days ago

இந்தியா

2 days ago

மேலும்