சாதி ரீதியாக சமூகத்தைப் பிளவு படுத்தும் பாஜகவின் முயற்சியை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்று பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
பாஜக பஞ்சாபில் தலித் அரசியலைக் கையில் எடுத்து ’தலித் இன்சாஃப் யாத்ரா’ என்பதைக் குறிப்பிட்டு பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் கூறும்போது, “பஞ்சாபில் நிலவும் அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இந்த மாதிரியான பிரிவினை தந்திரோபாயங்கள் பாஜகவுக்கு பஞ்சாபில் செல்லுபடியாகாது. அனைத்து தரப்பினரின் முன்னேற்றத்துக்காகவும் அமைதியாக இணைந்து வாழும் மாநிலம் ஆகும் இது” என்றார்.
பாஜக முன்னதாக, “தலித் உரிமைகள் பற்றி பேச அமரீந்தருக்கு தகுதி கிடையாது” என்று வர்ணித்தது.
இந்நிலையில் தலித் இன்சாஃப் யாத்ராவை அனுமதி பெறாமலே பாஜக நடத்தியதை அடுத்து பஞ்சாப் அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், பட்டியலிடத்தவருக்கு எதிரான வன்முறைகளில் பாஜக ஆளும் உ.பி.யில் மட்டும் மொத்த வன்கொடுமைகளில் 25% சம்பவங்கள் நடைபெறுகின்றன. 2018-ல் மிக அதிகம், என்று பஞ்சாப் அரசு அறிக்கையில் சாடப்பட்டுள்ளது.
அமரீந்தர் மேலும் கூறும்போது, “உண்மை என்னவெனில் விவசாயிகளையும் பட்டியலின மாணவர்களையும் பாஜக ஏமாற்றி விட்டது. மெட்ரிக்குக்குப் பிந்தைய ஸ்காலர்ஷிப்பி விலக்கிக் கொண்டதன் மூலம் பாஜகவின் மத்தியத் தலைமை இவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்பை மறுத்துள்ளது பாஜக. ஆனால் பஞ்சாப் அரசு அம்பேத்கர் ஸ்காலர்ஷிப் திட்டத்தைக் கொண்டு வந்து பட்டியலின மாணவர்களுக்கு நல்லது செய்தது பாஜகவுக்குப் பொறுக்கவில்லை.
அவர்களது மக்கள் விரோத அரசாட்சிக்கு எந்த வித நியாயமும் கற்பிக்க முடியாமல் தற்போது சாதி அரசியல் செய்து சமூகத்தை பிரித்தாளும் சூழ்ச்சி செய்கிறது.
சுதந்திரப் போராட்டக் காலத்தில் போராடிய அனுபவம் பஞ்சாபியர்களுக்கு உண்டு அதே போல் பஞ்சாபியர்கள் தங்கள் ஒற்றுமையையும் நேர்மையையும் பாதுகாக்க எந்த ஒரு தியாகத்தையும் செய்வார்கள். பஞ்சாப் மக்கள் உங்கள் கோணங்கிக் கூத்துக்களுக்கு ஒரு போதும் இசைய மாட்டார்கள்” என்று அமரீந்தர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
11 mins ago
இந்தியா
52 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago