மகாராஷ்டிரா மாநில பாஜகவில் மூத்த தலைவராக இருந்த ஏக்நாத் கட்ஸே மனக்கசப்பு காரணமாக அந்த கட்சியிலிருந்து விலகிய நிலையில், சரத்பவார் முன்னிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் முறைப்படி இன்று இணைந்தார்.
மகாராஷ்டிராவின் வடக்குப் மண்டலத்தில் செல்வாக்கு மிக்கத் தலைவராக இருந்த ஏக்நாத் கட்ஸேவின் விலகலால், வடக்கு மகாராஷ்டிராவில் பாஜகவுக்கு சற்று பின்னடைவு ஏற்படக்கூடும்.
மாநில பாஜகவுடன் கடந்த 2 ஆண்டுகளாகவே ஏக்நாத் கட்ஸே மிகுந்த அதிருப்தியுடன் இருந்து வந்தார். முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சியில் அமைச்சராகஇருந்த ஏக்நாத் கட்ஸே மீது கடந்த 2016-ம் ஆண்டு நில அபகரிப்பு மற்றும் ஊழல் குற்றச்சாட்டு இருந்தது. ஆனால், அந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. இதன்பின் பாஜகவுடன் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக அதிருப்தியுடன் இருந்து வந்த கட்ஸே புதன்கிழமை பதவி விலகினார்.
கடந்த பாஜக ஆட்சியில் ஏக்நாத் கட்கே வருவாய் துறை அமைச்சராகவும், அதற்கு முன் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தவர். பாஜகவில் இருந்து விலகிய நிலையில் தேசியவாத காங்கிரஸ் அலுவலகத்தில் இன்று நடந்த எளிமையான நிகழ்ச்சியில் சரத்பவார் முன்னியைில் ஏக்நாத் கட்ஸே இணைந்தார்.
» நவம்பர் 9 ல் லாலு ஜாமீனில் வருகிறார்; அடுத்த நாள் நிதிஷ் குமாருக்கு பிரியாவிடை: தேஜஸ்வி பிரச்சாரம்
பாஜகவில் இருந்து விலகிய ஏக்நாத் கட்கே புதன்கிழமை வடக்கு மகாராஷ்டிராவில் உள்ள தனது சொந்த மாவட்டம் ஜால்கானுக்குச் சென்று தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு தேசியவாத காங்கிரஸ் அலுவலகத்தில்கட்சியின் தலைவர் சரத் பவார் முன்னிலையில் கட்ஸே இணைந்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஏக்நாத் கட்ஸே பேசுகையில், “ என் அரசியல் வாழ்க்கையை அழிக்க தேவேந்திர பட்னாவிஸ் முயன்றார். கடந்த 30 ஆண்டுகளாக மகாராஷ்டிராவில் பாஜக வளர்வதற்கு உழைத்திருக்கிறேன்.” எனத் தெரிவித்தார்.
ஆனால் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். அவர் கூறுகையில் “ ஏக்நாத் கட்ஸே கூறுவதில் பாதியளவுதான் உண்மை இருக்கிறது. வெளி உலகிற்கு என்னை வில்லன் போல் சித்தரிக்க கட்ஸே முயல்கிறார்” எனத் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
38 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago