திருமண வாக்குறுதி அளித்து உ.பி.யில் 57 சதவீத பாலியல் வன்கொடுமை

By செய்திப்பிரிவு

தேசிய குற்ற ஆவண காப்பகபுள்ளிவிவரங்கள் அண்மையில் வெளியாகின. இதில் கடந்தஆண்டில் உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமைகள் குறித்த புள்ளிவிவரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

உத்தர பிரதேசத்தில் கடந்த ஆண்டில் மட்டும் திருமண வாக்குறுதி அளித்து 57 சதவீத பாலியல் வன்கொடுமைகள் நடைபெற்றுள்ளன. மேலும் 37 சதவீத பாலியல் வன்கொடுமைகளில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு, குற்றவாளிகள் ஏற்கெனவே அறிமுகம் ஆனவர்கள். 6 சதவீத பாலியல் வன்கொடுமைகளில் மட்டுமே குற்றவாளிகள் அடையாளம் காணப்படவில்லை.

இதுகுறித்து மாநில கூடுதல் டிஜிபி அசுதோஷ் பாண்டே கூறியதாவது:

மாவட்ட வாரியான பாலியல் வன்கொடுமை வழக்குகளை ஆய்வு செய்யும்போது பெரும்பாலான வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் குற்றவாளிகளுக்கும் இடையே ஏற்கெனவே பழக்கம் இருந்துள்ளது. அறிந்தவர்கள், தெரிந்தவர்கள் பாலியல்வன்கொடுமைகளில் ஈடுபடும்போது பெண்கள் மவுனம் காக்கக்கூடாது. துணிச்சலாக போலீஸில் புகார் அளிக்க வேண்டும்.

பெண்களின் தைரியத்தால் மட்டுமே பாலியல் வன்கொடுமைகளை தடுக்க முடியும். இதுதொடர்பான சட்ட விதிகளையும் பெண்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும். பெண்களின் பாதுகாப்புக்காக மாநில அரசு சார்பில் ‘மிஷன் சக்தி' என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்