கரோனா தொற்று; உலகெங்கும் இயற்கை மூலிகைகளுக்கான தேவை அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

கரோனா தொற்றை தொடர்ந்து இயற்கை மூலிகைகளுக்கான தேவையை உலகெங்கும் அதிகரித்துள்ளது

புதுடெல்லி உள்ள அனைத்திந்திய ஆயுர்வேத நிறுவனத்தில் மண்டல மூல மருந்துக் களஞ்சியத்தை மத்திய ஆயுஷ் இணை அமைச்சர் ஸ்ரீபத் யெஸ்ஸோ நாயக் காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் வைத்ய ராஜேஷ் கொடேச்சா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இயற்கை மருத்துவ மற்றும் மூலிகை பொருட்களுக்கான தேவை உலகெங்கும் அதிகரித்து வருகிறது. அஸ்வகந்தா, கிலோய், துளசி, காள்மேக், மூலேதி ஆகிய முக்கிய மூலிகைககளுக்கான தேவையை கோவிட் மேலும் அதிகரித்துள்ளது.

தேசிய ஆயுஷ் இயக்கத்தின் கீழ் மருத்துவத் தாவரங்களைப் பயிரிடுவதில் மண்டல மூல மருந்துக் களஞ்சியம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனைக் கருத்தில் கொண்டு, தேசிய மருத்துவத் தாவர வாரியத்துடன் இணைந்து, ஆயுஷ் அமைச்சகம், தேசிய மூல மருந்துக் களஞ்சியத்தையும், மண்டல மூல மருந்துக் களஞ்சியங்களையும் உருவாக்கியுள்ளது.

மூல மருந்துகளைப் பாதுகாக்கவும், ஆவணம் செய்யவும், புதுடெல்லியில் தொடங்கப்பட்டுள்ள இந்தக் களஞ்சியம் வழி வகுக்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்