உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரான ஐஎன்ஸ் கவராட்டி போர்க்கப்பல்: கடற்படையில் இணைந்தது

By செய்திப்பிரிவு

விசாகப்பட்டினம் கடற்படை தளத்தில் இன்று நடைபெற்ற விழாவில், உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரான ஐஎன்ஸ் கவராட்டி போர்க்கப்பலை, ராணுவ தலைமை தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவாணே கடற்படையில் இணைத்து வைத்தார்.

விழாவில் ஜெனரல் நரவாணேக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. துணை அட்மிரல் அதுல் குமார் ஜெயின் மற்றும் கடற்படை உயரதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

நீர்மூழ்கி கப்பல்களை ரகசியமாக தாக்கி அழிக்கும் கமோர்தா வகையைச் சேர்ந்த 4 சிறிய போர்க்கப்பல்கள் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டன. இவற்றில் கடைசி போர்க் கப்பலான ஐஎன்ஸ் கவராட்டி, கடற்படையில் இன்று இணைந்தது.

ஐஎன்எஸ் கவராட்டி போர்க் கப்பலை கொல்கத்தாவில் உள்ள கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் & இன்ஜினியரிங் என்ற நிறுவனம் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் வடிவமைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கப்பலில் உள்ள 90% உபகரணங்கள் உள்நாட்டில் தயாரானது. இதில் உள்ள ஆயுதங்களும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரானவை. இதன் மூலம் தற்சார்பு இந்தியாவுக்கு சான்றாக ஐஎன்எஸ் கவராட்டி போர்க்கப்பல் உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

மேலும்