2019-20-ம் ஆண்டுக்கான போனஸ்: மத்திய அமைச்சரவை அனுமதி

By செய்திப்பிரிவு

ஆண்டுதோறும் முந்தைய வருடத்தில் கெசடட் அல்லாத மத்திய அரசு ஊழியர்களின் பணியைக் கருத்தில் கொண்டு துர்கா பூஜா, தசரா காலத்தில் போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. உற்பத்தியோடு இணைந்த போனஸ் மற்றும் உற்பத்தியோடு சாராத போனஸை கெசடட் அல்லாத ஊழியர்களுக்கு உடனடியாக வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 2019-2020ஆம் ஆண்டுக்கான உற்பத்தியோடு இணைந்த போனஸுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இதன் மூலம் ரயில்வே, தபால் துறை, பாதுகாப்புத்துறை, ஈபிஃஎப்ஓ, ஈஎஸ்ஐசி உள்ளிட்ட அலுவலகங்களில் பணிபுரியும் 16.97 லட்சம் கெசடட் அல்லாத ஊழியர்கள் பயன்பெறுவர். இதற்காக ரூ. 2796 கோடி செலவாகும்.

கெசடட் அல்லாத மத்திய அரசு ஊழியர்களுக்கு உற்பத்தியோடு சாராத போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. 13.70 லட்சம் ஊழியர்கள் இதன் மூலம் பயனடைவார்கள். அரசுக்கு ரூ.946 கோடி கூடுதலாக செலவாகும்.

உற்பத்தியோடு இணைந்த போனஸ் மற்றும் உற்பத்தியோடு சாராத போனஸ் அறிவிப்பால் மொத்தம் 30.67 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயனடைவார்கள். இதனால் ரூ.3737 கோடி அரசுக்கு கூடுதலாக செலவாகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்