கோவிட் -19 தொற்றால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை தொடர்ச்சியாக குறைந்து வரும் போக்கை இந்தியா தக்க வைத்துக் கொண்டுள்ளது.
தொடர்ந்து இரண்டாம் நாளாக கரோனா தொற்று சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை, 7.5 லட்சத்துக்கும் கீழே குறைந்து வரும் போக்கு நீடிக்கிறது.
ஒவ்வொரு நாளும் அதிக எண்ணிக்கையிலான கோவிட் நோயாளிகள் குணம் அடைந்து வருகின்றனர். குணம் அடைவோரின் நிலையான போக்கும், தினசரி குணம் அடைவோர் அதிக எண்ணிக்கையில் இருப்பதும் தொடர்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 61,775 பேர் குணம் அடைந்துள்ளனர். அதே நேரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 10,83,608 பேருக்குத் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் புதிதாக தொற்றுப் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை என்பது 54,044 ஆகத்தான் இருக்கிறது.
சோதனை, தேடுதல் மற்றும் சிகிச்சை உத்தியை வெற்றிகரமாக அமல்படுத்துவதுடன் உரிய நேரத்தில் போதுமான சிகிச்சை அளிப்பது இறப்போர் விகிதத்தில் சரிவை ஏற்படுத்தி உள்ளது. தேசிய அளவில் உயிரிழப்போர் விகிதம் இன்றைக்கு 1.51% ஆக குறைந்திருக்கிறது.
தொற்றால் பாதிக்கப்பட்டோர் உயிரிழப்பு விகிதத்தை 1% கீழே குறைக்கும்படி மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இப்போது 14 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் தொற்றால் உயிரிழப்போரின் எண்ணிக்கை 1%-க்கும் குறைவாக உள்ளது.
இந்தியா முழுவதும் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை இன்றைக்கு 67,95.103 ஆக இருக்கிறது. தொடர்ந்து தினந்தோறும் அதிகமானோர் குணம் அடைந்துவருவதன் விளைவாக தேசிய அளவில் குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. அது 89% க்கு நெருக்கமாக இருக்கிறது.(88.81%)
10 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் மட்டும் புதிதாக குணம் அடைந்தோரின் விகிதம் 77% ஆக இருக்கிறது. மகாராஷ்டிராவை மிஞ்சும் அளவுக்கு கர்நாடகாவில் புதிதாக குணம் அடைந்தோரின் எண்ணிக்கை 8,500 –க்கும் அதிகமா இருக்கிறது. மகாராஷ்டிரா, கேரளா மாநிலங்களல் புதிதாக குணம் அடைந்தோரின் எண்ணிக்கை 7000-த்துக்கும் அதிகமாக இருக்கிறது.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 54,044 பேருக்கு புதிதாக நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 78 % பத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் மட்டும் ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் 8000-த்துக்கும் மேற்பட்டவர்களுக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. கர்நாடகா, கேரளா இரண்டு மாநிலங்களிலும் 6000-த்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 717 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 82% இறப்புகள் பத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் நேற்று மட்டும் 213 பேர் உயிரிழந்துள்ளனர். இது 29 % ஆகும். கர்நாடகாவில் 66 பேர் உயிரிழந்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago