உ.பி. டிஆர்பி மோசடி வழக்கு: விசாரணைக்கு ஏற்றது சிபிஐ

By செய்திப்பிரிவு

டிஆர்பி அல்லது ‘டார்கெட் ரேட்டிங் பாய்ன்ட்’ என்பது, தொலைக்காட்சி பார்வையாளர்களை எண்ணிக்கையை மதிப்பிடுவதற்கு, சந்தைப்படுத்துதல் முகமைகளும் விளம்பர முகமைகளும் பயன்படுத்தும் அளவீடு ஆகும்.

இந்தியாவில், டிஆர்பி.யானது ‘பிராட்காஸ்ட் ஆடியன்ஸ் ரிசர்ச் கவுன்சிலால்' (பிஏஆர்சி - பார்க்) பதிவு செய்யப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட வீடுகளின் தொலைக்காட்சிகளில் பார்-ஓ-மீட்டர்களை நிறுவுவதன் மூலம் இது பதிவு செய்யப்படுகிறது. இதுநாள் வரை, பார்க் அமைப்பானது இந்த மீட்டர்களை நாடெங்கும் 44 ஆயிரம் வீடுகளில் நிறுவி இருக்கிறது.

இந்நிலையில் டிஆர்பி-யில் மோசடி நடைபெற்று வருவதாக உத்தர பிரேதச மாநில போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். டிஆர்பி முறைகேட்டில் ஈடுபட்டு பார்வையாளர்களையும் வருமானத்தையும் பெருக்கும் நோக்கில் செயல்பட்டதாக அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளது. லக்னோ நகரிலுள்ள ஹஸ்ரத்கஞ்ச் போலீஸ் நிலையத்தில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று மாநில அரசு பரிந்துரை செய்தது. இதையடுத்து இந்த வழக்கை சிபிஐ நேற்று விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு, மோசடியில் ஈடுபட்ட அடையாளம் காணப்படாத நபர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது.

அண்மையில் இதுபோன்ற டிஆர்பி மோசடி வழக்கை மகாராஷ்டிர மாநிலத்தில் மும்பை போலீஸார் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்