பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவிற்காக இன்று முதல் உ.பி. முதல்வர் யோகி பிரச்சாரம்

By ஆர்.ஷபிமுன்னா

பிஹார் சட்டப்பேரவைக்கு பாஜகவிற்காக இன்றுமுதல் உத்திரப்பிரதேச முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத் தேர்தல் பிரச்சாரம் துவக்குகிறார். முதல்கட்டமாக அவருக்கு 18 கூட்டங்களில் பேச பாஜக ஏற்பாடு செய்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடிக்கு அடுத்தபடியாக பாஜகவில் நட்சத்திர அந்தஸ்து பெற்றவராக உபி முதல்வர் யோகி.கருதப்படுகிறார். இவர் உபியின் முதல்வராக 2017 இல் பதவி ஏற்றது முதல் நடைபெற்று பாஜகவின் தேர்தல் பிரச்சாரங்களில் முக்கிய இடம் பெற்றுள்ளார்.

குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் பிரதமர் மோடியை அடுத்து அதிகமானக் கூட்டங்களில் உபி முதல்வர் யோகி பேசியிருந்தார். இதேநிலை 2018 இல் வட கிழக்கு மாநிலங்களின் திரிபுரா, நாகாலாந்து மற்றும் மேகாலாயா ஆகிய மாநிலங்களிலும் இருந்தது.

இந்நிலையில், பிஹாரின் 243 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு அக்டோபர் 28 முதல் துவங்கி மூன்றுகட்ட தேர்தல் நடைபெறுகிறது. இதிலும், பிரதமர் மோடியை போல் பாஜக உபி முதல்வர் யோகியை பெரிதும் நம்பியுள்ளது.

பிஹாரிலும் பிரதமர் மோடிக்கு இணையாகப் பிரச்சாரக்களத்தில் உபி முதல்வர் யோகியை இறக்குகிறது பாஜக. இங்குள்ள கைமூர் தொகுதியில் முதல்வர் யோகியின் முதல் பிரச்சாரக் கூட்டம் இன்று அக்டோபர் 20 இல் நடைபெறுகிறது.

தொடர்ந்து முதல்கட்ட தேர்தலில் இரண்டு நாட்களுக்காக ஆறு பிரச்சாரக் கூட்டங்களில் உபி முதல்வர் யோகி உரையாற்றுகிறார். பிறகு மேலும் 12 பிரச்சாரக் கூட்டங்களிலும் உபி முதல்வர் யோகி பேச உள்ளார்.

கரோனா ஊரடங்கு காலத்தில் டெல்லி மற்றும் உபியில் பிஹார் மாநிலத் தொழிலாளர்கள் சிக்கியிருந்தனர். இவர்களில் சுமார் 30 லட்சம் பேர் தங்கல் வீடு திரும்ப உபி அரசு உதவியதாகக் கருதப்படுகிறது.

எனவே, இந்த நடவடிக்கையை முன்னிறுத்துவதுடன் ராமர் கோயில் கட்டப்பட்டு வருவதில் பாஜகவின் பங்கினையும் உபி முதல்வர் யோகி எடுத்துரைக்க உள்ளார். இவரது சொந்த மாவட்டமான கோரக்பூர், பிஹாரின் எல்லையில் அமைந்துள்ளது.

இதன் மருத்துவமனைகளிலும் பிஹார்வாசிகளுக்கு அளிக்கப்பட்ட கரோனா மீதான சிகிச்சை குறித்து உபி முதல்வர் முன்னிறுத்த உள்ளார். நவம்பர் 2 மற்றும் 7 தேதிகளில் நடைபெறவிருக்கும் மற்ற இரண்டு கட்ட தேர்தலின் முடிவுகள் அதே மாதம் 10 ஆம் தேதி வெளியாக உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

47 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்