குறைகிறது தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை: கடந்த 24 மணி நேரத்தில் 46,790 பேருக்கு தொற்று

By பிடிஐ

இந்தியாவில் புதிதாகக் கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிரது. கடந்த 24 மணி நேரத்தில் 46,790 பேருக்கு புதிதாகத் தொற்று ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 75 லட்சத்தி 97 ஆயிரத்து 63 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 587 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 1 லட்சத்து 15 ஆயிரத்து 197 ஆக இருக்கிறது.

தினசரி பலி எண்ணிக்கை தொடர்ச்சியாக 2வது நாளாக 600க்கும் கீழ் குறைந்துள்ளது, அதே போல் பாதிப்பு எண்ணிக்கை 50,000த்திற்கும் கீழ் குறையத் தொடங்கியுள்ளதும் நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.

அதேபோல் கரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் 8 லட்சத்துக்கும் கீழ் குறைந்து 7,48,538 ஆக உள்ளது.
சிகிச்சை பெறுவோர் விகிதம் மொத்த கரோனா தொற்று எண்ணிக்கையில் 9.85% ஆக இருக்கிறது.

மொத்தமாக 67 லட்சத்து, 33 ஆயிரத்து 228 பேர் கரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். இதன் மூலம் தேசிய கரோனா குணமடைவு விகிதம் 88.63% ஆக உள்ளது. கோவிட் 19 மரண விகிதம் 1.52% ஆக உள்ளது.

கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி 20லட்சத்தைக் கடந்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை அக்டோபர் 11ம் தேதி 70 லட்சத்தைக் கடந்தது.

மொத்த சாம்பிள்கள் சோதனை ஐசிஎம்ஆர் தகவல்களின்படி 9 கோடியே 61 லட்சத்து 16 ஆயிரத்து 771 ஆக உள்ளது. நேற்று, 19ம் தேதி 10,32,795 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டன.

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்