இந்தியாவின் ஒரு நாள் கரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை; 60 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது. அதே போல் கரோனா தினசரி பலி எண்ணிக்கை 600க்கும் குறைந்து 579 ஆக நேற்று இருந்தது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை தற்போது 75 லட்சத்து, 50 ஆயிரத்து 273 ஆக உள்ளது, நேற்று 55,722 பேருக்கு புதிதாகக் கரோனா தொற்றியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 579 பேர் கரோனாவுக்குப் பலியாக 1 லட்சத்து 14 ஆயிரத்து 610ஆக பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதற்கு முன்பாக அக்டோபர் 13ம் தேதி தினசரி புதிய தொற்று எண்ணிக்கை 60 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது குறிப்பிடத்தக்கது.
அதே போல் கரோனா வைரஸுக்கான சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 8 லட்சத்துக்கும் கீழ் குறைந்து 7 லட்சத்து 72 ஆயிரத்து 55 ஆக உள்ளது.
இது மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கையில் 10.23% ஆக மட்டுமே உள்ளது.
கரோனாவிலிருந்து நலமடைந்தோர் எண்ணிக்கை 88.26% ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் கரோனா பலி விகிதம் 1.52% ஆக உள்ளது.
இந்தியாவில் ஆக.7ம் தேதி 20 லட்சத்தைக் கடந்த கரோனா பதிப்பு தற்போது 75 லட்சத்தைக் கடந்துள்ளது.
ஐசிஎம்ஆர் தகவலின் படி ஒட்டுமொத்தமாக 9 கோட்யே 50 லட்சத்து 83 ஆயிரத்து 976 சாம்பிள்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. ஞாயிறு மட்டும் 8 லட்சத்து 59 ஆயிரத்து 786 சாம்பிள்கள் சோதிக்கப்பட்டுள்ளன.
குணமடைந்தோர் எண்ணிக்கை 66,63,608 ஆக உள்ளது. நேற்று 579 பேர் மரணமடைந்ததில் மகாராஷ்டிராவில் 150, மேற்கு வங்கத்தில் 64, தமிழ்நாட்டில் 56, கர்நாடகாவில் 51, சத்திஸ்கரில் 39, உ.பி.யில் 29, டெல்லியில் 28 பேர் மரணமடைந்துள்ளனர்.
மொத்த பலி எண்ணிக்கை 1,14,610 -ல், மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 42,115, தமிழ்நாட்டில் 10.642, கர்நாடகாவில் 10,478, உ.பி.யில் 6658, ஆந்திராவில் 6,429, மேற்கு வங்கத்தில் 6,056, டெல்லியில் 6,009, பஞ்சாபில் 4,012, குஜராத்தில் 3,635 என்று பலி எண்ணிக்கைகள் உள்ளன. 70% மரணங்கள் கரோனாவுடன் பிற உயிருக்கு ஆபத்தான நோய்கள் இருந்ததால் ஏற்பட்டதே என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago