இந்திய பத்திரிகை ஆசிரியர்கள் சங்கத் தலைவராக சீமா முஸ்தபா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நாட்டிலுள்ள பத்திரிகை ஆசிரியர்களுக்காக உருவாக்கப்பட்ட அமைப்பாக இந்திய பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் உள்ளது. இந்த சங்கத்தின் தலைவராக இருந்த 'தி பிரின்ட்' செய்தி இணையதள ஆசிரியர், சேகர் குப்தாவின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து கடந்த 16-ம் தேதி இணையவழியில் தேர்தல் நடைபெற்றது.
இதற்கான முடிவுகள் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டன. அதில் ‘தி சிட்டிசன்’ ஆசிரியர் சீமா முஸ்தபா தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் 'ஹார்ட்நியூஸ்' ஆசிரியர் சஞ்சய் கபூர் பொதுச் செயலராகவும், 'தி கேரவன்' ஆசிரியர் அனந்த் நாத் பொருளாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர். இதற்கு முன்பு 'பிஸினஸ் ஸ்டாண்டர்ட்' ஆசிரியர் குழு இயக்குநர் ஏ.கே.பட்டாச்சார்யா பொதுச் செயலராகவும், 'ரெடிஃப் டாட்.காம்' பங்களிப்பு ஆசிரியர் ஷீலா பட் பொருளாளராகவும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago