ரத்து செய்யப்பட்ட 370 -வது சட்டப் பிரிவு மீண்டும் மீட்டெடுக்கப்படும் என்று சிதம்பரம் ட்விட்டரில் வெளியிட்டுள்ள கருத்து மிகவும் வெட்கக்கேடானது என்று பாஜக தலைவர் ஜே.பி.நட்டா இன்று விமர்சித்துள்ளார்.
காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு உரிமைகளை வழங்கிய 370 -வது பிரிவை மத்திய அரசு கடந்த ஆண்டு ரத்து செய்து, மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்விதமாக முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் நேற்றைய தனது ட்விட்டர் பதிவில் ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார்.
அதில் ''ஜம்மு-காஷ்மீர் மக்களின் அந்தஸ்து மற்றும் உரிமைகளை மீட்டெடுப்பதில் கட்சி உறுதியுடன் நிற்கிறது, ஆகஸ்ட் 5, 2019 மோடி அரசாங்கத்தின் "தன்னிச்சையான மற்றும் அரசியலமைப்பற்ற" முடிவுகளை ரத்து செய்ய வேண்டும்'' என்றும் கருத்துத் தெரிவித்திருந்தார்.
ஜம்மு-காஷ்மீரில் 370 வது பிரிவை மீட்டெடுப்பதற்கான கோரிக்கை தொடர்பாக ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள கருத்துக்கு பாஜக தலைவர் ஜேபி நட்டா தனது கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''பிஹார் தேர்தலில் முன்னதாகப் பேசுவதற்கு நல்லாட்சி வழங்கும் திட்டம் ஏதும் அவர்களிடம் இல்லாததால், காங்கிரஸ் 'இந்தியாவைப் பிரிக்கும் அழுக்கு தந்திரங்களுக்கு திரும்பியுள்ளது. ராகுல் காந்தி பாகிஸ்தானைப் புகழ்ந்தார், இப்போது சிதம்பரம் 370 வது பிரிவை மீண்டும் விரும்புகிறார். வெட்கக்கேடானது!'' என்று ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago