உத்திரப்பிரதேசத்தின் பைஸாபாத் மாவட்டத்தின் பெயர் அயோத்யா என மாறியது. இந்தவகையில், அதன் ரயில் நிலையத்தையும் அயோத்யா என மாற்ற உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் முடிவு செய்துள்ளார்.
உபியின் அயோத்தியை ஒட்டியுள்ள நகரம் பைஸாபாத். இவ்விரண்டும் பைஸாபாத் மாவட்டத்தின் கீழ் அமைந்திருந்தது. இதில் பெயரை மாற்றி அயோத்யா மாவட்டம் என உபி அரசு கடந்த வருடம் மாற்றியது.
எனினும், அந்நகரின் ரயில் நிலையத்தின் பெயர் பைஸாபாத்தின் பெயரிலேயே இருந்தது. தற்போது இதன் பெயரையும் மாற்றி அயோத்யா ரயில் நிலையம் அல்லது சாக்கேத் ரயில் நிலையம் என்றழைக்க உபி முதல்வர் யோகி விரும்புகிறார்.
இதற்காக உபி அரசு தரப்பில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு விட்டன. இதன் இறுதி முடிவிற்காக அனைத்து தஸ்தாவேஜ்களும் மத்திய அரசிற்கு அனுப்பப்பட்டுள்ளன.
» பட்டினிக் குறியீட்டில் பாகிஸ்தான், வங்கதேசத்தை விட இந்தியா மோசம்
» இந்தியாவில் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் 65 லட்சமாக உயர்வு: நோய் தொற்று 74 லட்சத்தைக் கடந்தது
உபியில் கடந்த 2017 ஆம் ஆண்டு பாஜக ஆட்சி முதன்முறையாக தனிமெஜாரிட்டியில் அமைந்தது. இதன் முதல்வராக யோகி அமர்த்தப்பட்டது முதல், இஸ்லாமியர்களின் பெயரில் உள்ள முக்கியமான இடங்கள் பெயர் மாற்றங்களுக்கு உள்ளாகின்றன.
இந்தவகையில், முதலாவதாக உபியின் அலகாபாத் மாவட்டத்தின் பெயர் பிரயாக்ராஜ் என மாற்றப்பட்டது. அடுத்து வாரணாசிக்கு அருகிலுள்ள சண்டவுலியின் முகல்சராய் ரயில் நிலையம், பண்டிட் தீன் தயாள் உபாத்யா என பெயர் மாற்றமானது.
கடந்த சமாஜ்வாதி ஆட்சியில் முதல்வராக இருந்த அகிலேஷ்சிங் யாதவால் அறிவிக்கப்பட்டு ஆக்ராவில் முகலாயர் அருங்காட்சியகம் கட்டப்பட்டு வருகிறது. இதன் பெயரும், சத்ரபதி சிவாஜி மஹராஜ் என மாற்றப்படும் என
உபி முதல்வர் யோகி சென்ற மாதம் அறிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago