பட்டினிக் குறியீட்டில் பாகிஸ்தான், வங்கதேசத்தை விட இந்தியா மோசம்

By செய்திப்பிரிவு

உலகிலேயே இந்தியாவில்தான் 5 வயதுக்குக் கீழான குழந்தைகள் ஊட்டச்சத்தின்றி, பராமரிப்பின்றி விரயம் செய்யப்படுவதாக குளோபல் ஹங்கர் இண்டெக்ஸ் என்ற உலகப் பட்டினிக் குறியீடு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2015-19 காலக்கட்டத்தில் இது படுமோசமடைந்துள்ளது.

2010-14 காலக்கட்டத்தில் குழந்தைகள் ஊட்டச்சத்தின்றி விரயம் செய்யப்படும் சதவீதம் 15.1% ஆக இருந்தது, 2015-19-ல் இது மோசமடைந்து 17.3% ஆக அதிகரித்துள்ளது.

உலகப் பட்டினிக் குறியீட்டு நாடுகள் 107-ல் இந்தியா 94-ம் இடத்தில் உள்ளது. அண்டைநாடுகளான வங்கதேசம் 75ம் இடத்திலும் பாகிஸ்தான் 88ம் இடத்திலும் உள்ளன. இந்த இரண்டு நாடுகளை விடவும் இந்தியா மோசமாக உள்ளது. இந்த அறிக்கை வெள்ளிக்கிழமையன்று வெளியானது.

நான்கு அளவுகோல்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. குழந்தைகளின் ஊட்டச்சத்து விவகாரத்தில் உயரத்துக்கு தகுந்த எடை இல்லாத குறை ஊட்டச்சத்து மற்றும் வயதுக்குரிய உயரம் இல்லாத நீண்ட கால ஊட்டச்சத்தின்மைக் குறியீடு இரண்டிலும் இந்தியா மோசமாக உள்ளது.

சைல்ட் வேஸ்டிங் என்று அழைக்கப்படும் ஊட்டச்சத்தின்மை விவகாரத்தில் கடந்த 10 ஆண்டுகளாக மிக மோசமாக இருப்பதாகவும் 20 ஆண்டுகளாகவே இதில் முன்னேற்றம் இல்லை என்பதையும் இந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

ஆனால் போதிய அளவு கலோரி இல்லாத 14% மக்கள் தொகையில் ஊட்டச்சத்தினால் இறக்கும் குழந்தைகள் விகிதம் இந்தியாவில் மிகக்குறைவாக 3.7% ஆக உள்ளது.

தெற்கு, கிழக்கு, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பட்டினிக் குறியீட்டில் இந்தியாவை விடவும் மோசமாக உள்ள நாடுகள்ல் டைமூர்-லெஸ்ட், ஆப்கானிஸ்தான், வடகொரியா ஆகிய நாடுகள் உள்ளன.

பெருந்தொற்று நோய் விளைவு:

உலகம் முழுதும் 69 கோடி மக்கள் இன்னமும் ஊட்டச்சத்தின்மையினால் அவதிப்பட்டு வருவதாக இதே அறிக்கை கூறுகிறது. வறுமை மற்றும் பட்டினி ஒழிப்பு நடவடிக்கைகளை கோவிட்-19 வைரஸ் பெரிய அளவில் பாதித்துள்ளது.

“2030-ம் ஆண்டில் பட்டினியை பூஜ்ஜியமாக்கும் நீடித்த வளர்ச்சி இலக்கை நோக்கி உலக நாடுகள் செல்லவில்லை. தற்போதைய நிலவரப்படி இப்படியே போனால் 37 நாடுகள் பசியைக் குறைக்கும் விகிதத்திலும் பின்னடைவே காணும். இந்த அறிக்கை கோவிட்-19 தாக்கத்தை கணக்கிலெடுக்கவில்லை. கரோனா பெருந்தொற்று பட்டினிக் குறியீட்டில் வளரும், ஏழை நாடுகளை மேலும் கிழ்நிலைக்கே தள்ள வாய்ப்பு. நம் உணவு அமைப்பு முறைகள் பட்டினியை முற்றிலும் ஒழிக்க, பூஜ்ஜியமாக்க போதாதவையாக உள்ளன” என்று இந்த அறிக்கை நாடுகளை எச்சரித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

மேலும்