மும்பையை அடுத்து டெல்லியில் போதைப்பொருள் தடுப்பு வேட்டை: என்சிபி அதிகாரிகள் திட்டம்

By செய்திப்பிரிவு

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான வழக்கில் அவரது காதலியும் நடிகையுமான ரியா சக்கரவர்த்தியிடம் நடந்த விசாரணையில் அவருக்கு போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து விரிவடைந்த விசாரணையில் போதைப் பொருள் புழக்கம் தொடர்பாக ரியா உள்ளிட்ட 20 பேரை என்சிபி கைது செய்தது. பாலிவுட் பிரபலங்கள் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில் மும்பையை அடுத்து தலைநகர் டெல்லி மற்றும் சில மெட்ரோ நகரங்களில் போதைப் பொருள் புழக்கம் மற்றும் கடத்தலுக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்க என்சிபி திட்டமிட்டுள்ளதாக அதன் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.

இது தொடர்பாக ஏதேனும் துப்பு கிடைத்துள்ளதா என்பதை தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார். என்றாலும் டெல்லி தற்போது என்சிபி.யின் காண்காணிப்பு வளையத்தில் இருப்பதாகவும் முக்கிய கடத்தல் புள்ளிகளை சுற்றி வளைக்கும் வகையில் அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும் என்றும் அந்த அதிகாரி கூறினார்.

சர்வதேச அளவிலான போதைப் பொருள் விநியோக சங்கிலியை உடைக்க அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ரஷ்யா, பிரிட்டன், தென்னாப்ரிக்கா ஆகிய நாடுகளுடன் தகவல்களை பரிமாறிக் கொள்வதாகவும் இதில் வெற்றி கிடைத்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்