கோவிட்-19 உதவிக்காக கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு உயர்மட்ட குழுக்களை மத்திய அரசு அனுப்பியது
சமீப நாட்களாக அதிக அளவில் கோவிட்-19 பாதிப்புகளை கண்டு வரும் கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு உயர்மட்ட குழுக்களை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் அனுப்பியுள்ளது.
கட்டுப்பாடு, கண்காணிப்பு, பரிசோதனை, தொற்று தடுப்பு மற்றும் திறன்மிகு மருத்துவ மேலாண்மை ஆகியவற்றில் மேற்கண்ட மாநிலங்களுக்கு மத்திய குழுக்கள் உதவும்.
ஒவ்வொரு குழுவிலும் ஒரு இணை செயலாளர் (அந்தந்த மாநிலத்துக்கான தொடர்பு அதிகாரி), பொது சுகாதார விஷயங்களை கவனித்துக் கொள்ள ஒரு பொது சுகாதார நிபுணர், தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவவும், மாநிலத்தின் மருத்துவ மேலாண்மையையை கவனிக்கவும் ஒரு மருத்துவர் ஆகியோர் இருப்பார்கள்.
சரியான நேரத்தில் நோய் தொற்றை கண்டறிதல் மற்றும் அதைத் தொடர்ந்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளில் உள்ள பிரச்சினைகளை எதிர்கொள்வதில் மத்திய குழுக்கள் மாநிலங்களுக்கு உதவுவார்கள்.
நாட்டின் மொத்த பாதிப்புகளில் 4.3 சதவீதம் கேரளாவில் உள்ளன. கர்நாடாகவில் 10.1 சதவீதமும், மேற்கு வங்கத்தில் 4.2 சதவீதமும், ராஜஸ்தானில் 2.3 சதவீதமும், சத்தீஸ்கரில் 2.1 சதவீதமும் உள்ளன.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago