டெல்லியில் 95% காற்று மாசு உள்ளூர் காரணிகளால் ஏற்படுகிறது: பிரகாஷ் ஜவடேகர்

By செய்திப்பிரிவு

டெல்லியில் 95% காற்று மாசு உள்ளூர் காரணிகளால் ஏற்படுகிறது என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

டெல்லி மற்றும் தேசிய தலைநகர் மண்டலத்தில் காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்காக, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் 50 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

டெல்லியில் இந்த குழு அதிகாரிகளிடம் இன்று பேசிய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், தற்போதைய கரோனா தொற்று நேரத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆற்றும் பணி, கோவிட் முன்னணி பணியாளர்கள் ஆற்றம் பணிக்கு நிகரானது என்றார்.

இவர்கள் டெல்லியின் பல பகுதிகளில் நேரடியாக சென்று ஆய்வு நடத்தி தகவல் தெரிவிப்பது, டெல்லியில் காற்று மாசுவை குறைப்பதற்கு உதவும் என அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.

டெல்லியில் 95% காற்று மாசுவுக்கு, உள்ளூரில் ஏற்படும் புகை, கட்டுமான தூசி, குப்பைகள் எரிப்பு ஆகியவைதான் காரணம் என்றும், சுற்றுவட்டார வயல்களில் அறுவடைக்கு பிந்தைய எரிப்பு காரணமாக ஏற்படும் மாசு 4 சதவீதம்தான் என்று அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.

டெல்லியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து ‘சமீர்’ என்ற கைப்பேசி செயலி மூலம் காற்று மாசு ஏற்படுவதற்கான காரணங்களை தெரிவிப்பர். அதற்கேற்ப சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பர். இது குறித்த விவரங்கள் டெல்லியில் உள்ள மாநில அரசுடனும் பகிர்ந்து கொள்ளப்படும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

40 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

மேலும்