மகாராஷ்டிரா, கோவாவில் மிக கனமழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

மத்திய மகாராஷ்டிரா மற்றும் அதனருகில் உள்ள தெற்கு கொங்கன் பகுதிக்கு மேலே வலுவான குறைந்த காற்றழுத்தப் பகுதி உருவாகி அதே இடத்தில் நிலைகொண்டிருக்கிறது.

இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:

2020 அக்டோபர் 15-ம் தேதி இன்றுகாலை இந்திய நேரப்படி 08.30 மணிக்கு மத்திய மகாராஷ்டிரா மற்றும் அதன் அருகில் உள்ள தெற்கு கொங்கன் பகுதிக்கு மேலே வலுவான குறைந்த காற்றழுத்தப் பகுதி உருவாகி அதே இடத்தில் நிலைகொண்டிருக்கிறது.

இது மேற்கு-வடமேற்கு திசையை நோக்கி நகரும் என்று தெரிகிறது. பின்னர் அது மகாஷ்டிரா கடலுக்கு அருகே கிழக்கு மத்திய அரேபிய கடலில் உருப்பெற்று, அடுத்த 48 மணி நேரத்தில் மகாஷ்டிரா கடல் அருகே-தெற்கு குஜராத் கடலில் அரேபிய கடலின் வடகிழக்கு பகுதி அருகே & கிழக்கு மத்திய பகுதிக்கு மேலே ஆழ்ந்த காற்றழுத்தமாக மாறும். பின்னர் இது படிப்படியாக மேற்கு வடகு மேற்கு திசையை நோக்கி நகர்ந்து மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளது.

மழைப்பொழிவு எச்சரிக்கை

2020 அக்டோபர் 15-ம் தேதி; கொங்கன் & கோவா மற்றும் மகாஷ்டிராவின் மலைப்பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யக்கூடும். அத்துடன் பெரும்பாலான பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக் கூடும். கொங்கன் தெற்கு பகுதி மற்றும் அதனை ஒட்டி உள்ள மகாஷ்டிராவின் மலைப்பகுதிகளில் தீவிர கனமழை (நாளொன்றுக்கு 20 செமீ-க்கும் அதிகமாக) யும் பெய்யக்கூடும்.

2020 அக்டோபர் 16-ம் தேதி; கொங்கன் & கோவாவில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யக்கூடும். அத்துடன் பெரும்பாலான பகுதிகளில் லேசானது முதல் மிதமானதுவரை மழை பெய்யக் கூடும். தெற்கு குஜராத்தின் கடலோர மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்