கோவிட் பாதிப்புகள் இரட்டிப்பாகும் காலம் 73 நாட்களாக அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

இதுவரை இல்லாத சாதனையை இந்தியா புரிந்துள்ளது. கோவிட் பாதிப்புகள் இரட்டிப்பாகும் காலம் கிட்டத்தட்ட 73 நாட்களாக அதிகரித்துள்ளது.

அதிக அளவிலான குணமடைதல்களையும், சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதையும் இந்தியா கண்டு வருகிறது. இதன் காரணமாக, கோவிட்-19 பாதிப்புகள் இரட்டிப்பாகும் காலம் கிட்டத்தட்ட 73 நாட்களாக (72.8 நாட்கள்) அதிகரித்துள்ளது

ஆகஸ்ட் மத்தியில் 25.5 நாட்களக இருந்த இரட்டிப்பாகும் விகிதம், தற்போது 73 நாட்களாக அதிகரித்துள்ளது. மத்திய, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் ஒருங்கிணைந்த முயற்சிகளின் மூலம் இது சாத்தியமாகி உள்ளது.

பரிசோதனைகளின் எண்ணிக்கை நாடு முழுவதும் அதிகரித்துள்ள நிலையில், தொற்றுகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. சிறப்பான முறையில் நோய்ப் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுக் கொண்டிருப்பது இதன் மூலம் நிரூபணம் ஆகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 81,514 நோயளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 8,12,390 ஆகும். நாட்டில் இது வரை உறுதிப்படுத்தப்பட்ட மொத்த பாதிப்புகளில் இது 11.12 சதவீதமாகும்.

கடந்த 24 மணி நேரத்தில் 67,708 புதிய பாதிப்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இதில் 77 சதவீதம் பத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து பதிவாகி உள்ளது. மகாராஷ்டிரா முதலிடத்திலும், கர்நாடகா இரண்டாம் இடத்திலும் உள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்