வட கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா அதை சுற்றியுள்ள பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளது
இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:
தெலங்கானாவில் மையம் கொண்டிருந்தக் காற்றழுத்தத் தாழ்வு நிலையானது, மேற்கு நோக்கி நகர்ந்து இன்று காலை 11.30 மணியளவில் வட உள் கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவைச் சுற்றியுள்ள பகுதிகள், குல்பர்காவில் (வட உள் கர்நாடகா) இருந்து வடக்கே 40 கிலோ மீட்டர் தொலைவிலும், சோலாப்பூரில் (மேற்கு மகாராஷ்டிரா) இருந்து கிழக்கே 110 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
இந்தக் காற்றழுத்தத் தாழ்வு நிலையானது மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து, அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இது, மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து, வரும் 16ம் தேதி காலையில் மகாராஷ்டிரா கரையை ஒட்டியுள்ள கிழக்கு மத்திய அரபிக் கடலில் மையம் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், கிழக்கு மத்திய மற்றும் மகாராஷ்டிராவை ஒட்டியுள்ள வட கிழக்கு அரபிக் கடல், தெற்கு குஜராத் கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் நிலையாக இது வலுவடையவும் வாய்ப்பிருக்கிறது.
கிழக்கு மத்திய மற்றும் வட கிழக்கு அரபிக்கடல் மற்றும் மகாராஷ்டிரா, குஜராத் கடற்கரைப் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால், இந்தப் பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முக்கிய செய்திகள்
இந்தியா
53 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago