பெண்களுக்கு எதிரான  குற்றங்களை  மத்திய அரசு ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது: கிஷன் ரெட்டி 

By செய்திப்பிரிவு

பெண்கள் மற்றும் பின்தங்கியவர்களுக்கு எதிரான குற்றங்களை மத்திய அரசு ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது என மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி கூறினார்.

விரல்ரேகை பிரிவு இயக்குனர்களின் 21வது அகில இந்திய மாநாடு: மத்திய உள்துறை இணையமைச்சர்ஜி கிஷன் ரெட்டி தொடக்கம்

விரல் ரேகை பிரிவு இயக்குனர்களின் 21வது அகில இந்திய மாநாட்டை மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், தேசிய குற்ற ஆவண பிரிவு இ-சைபர் பரிசோதனை கூடமும் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, குற்றம் மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளை பிரதமர் நரேந்திர மோடி அரசு பொறுத்துக் கொள்வதில்லை என்றார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில், குற்றங்கள் நடைபெறாத இந்தியாவை உருவாக்குவதுதான், எங்கள் நோக்கம் என அமைச்சர் கிஷன் ரெட்டி கூறினார்.

குற்றங்களை ஜாதி, இனம், மதம் மற்றும் மண்டல ரீதியாக அரசு பார்ப்பதில்லை எனவும், மனிதநேயம், அமைதி, பெண்கள் மற்றும் பின்தங்கியவர்களுக்கு எதிரான குற்றங்களை அரசு ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது எனவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நீதி கிடைப்பதை உறுதி செய்ய மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கும் என்று அமைச்சர் கிஷன் ரெட்டி கூறினார்.

நாடு முழுவதும் காவல்துறை நவீன மயமாக்கத்துக்கு மத்திய அரசு 2019-20ம் நிதியாண்டில் 780 கோடி வழங்கியதாகவும் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

43 mins ago

இந்தியா

52 mins ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்