வேலை போன விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட புலம் பெயர் தொழிலாளர்: உ.பி., நொய்டாவில் நிகழ்ந்த சோகம்

By பிடிஐ

உ.பி. மாநிலம் நொய்டாவில் 30 வயது மதிக்கத்தக்க புலம் பெயர் தொழிலாளர் ஒருவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பரோலா என்ற கிராமத்தில் தான் குடியிருந்த வாடகை வீட்டில் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

பிஹார் மாநிலம் சாப்ரா பகுதியிலிருந்து இங்கு வந்து தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார் இவர்.

8-9 மாதங்களாக அவர் இங்கு வசித்து வந்தார். 2-3 வாரங்களுக்கு முன் அவர் வேலையை இழந்தார். இதனையடுத்து அவர் மனமுடைந்த நிலையில் இருந்துள்ளார்.

இந்நிலையில் தூக்கில் தொங்கியதாக போலீஸார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

அவர் எழுதி வைத்திருந்த தற்கொலைக் குறிப்பில் அவர் தன்னுடைய இந்த தீவிர முடிவுக்காக குடும்பத்தினர் தன்னை மன்னிக்க வேண்டும் எனவும் தன் சாவுக்கு தானே பொறுப்பு ,வேறு யாருமல்ல என்று அவர் கூறியிருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக மேலும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 mins ago

இந்தியா

13 mins ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

மேலும்