மத்தியப் பிரதேசத்தில் உள்ள 64 சிறுநகரங்களில் நகர்ப்புற சேவைகளை மேம்படுத்த இந்தியா மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கிக்கு இடையே 270 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.
தண்ணீர் விநியோகம், ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் மற்றும் கழிவுநீர் மேலாண்மை மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் திறன்களை மேம்படுத்துவதற்காக இந்திய அரசு மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கிக்கு இடையே 270 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான கடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தில் இந்தியாவின் சார்பில் நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை கூடுதல் செயலாளர் (நிதி வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி) சமீர் குமார் காரேவும், ஆசிய வளர்ச்சி வங்கியின் சார்பில் அதன் இந்தியாவுக்கான இயக்குநர் டகியோ கொனிஷியும் கையெழுத்திட்டனர்.
ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு பேசிய காரே, இந்த நகரங்களில் உள்ள மக்களின் வாழ்க்கை தரம் இதன் மூலம் மேம்படும் என்று கூறினார்.
சிறப்பான, தரமான மற்றும் நிலையான தண்ணீர் விநியோகம் மற்றும் கழிவுநீர் மேலாண்மை மத்தியப் பிரதேசத்தின் சிறு நகரங்களில் இந்த ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கும் என்று அவர் மேலும் கூறினார்.
கொனிஷி கூறுகையில், இந்த திட்டத்தின் மூலம் அனைவருக்கும் தூய்மையான தண்ணீர் மற்று சுகாதாரம் என்னும் இலக்கை அடைய முடியும் என்று கூறினார். பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேசனிடம் இருந்து இந்த திட்டத்திற்கு ஆதரவு கிடைக்கும்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago