காரில் ஏ.சி.யை ஆன் செய்து விட்டு மதுபோதையில் உறங்கிய நபர் காரிலேயே மரணம் : நொய்டாவில் பரிதாபம்

By பிடிஐ

உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் கார் ஒன்றில் ஏ.சி.யை ஆன் செய்து விட்டு மதுபோதையில் காரிலேயே தூங்கிய நபர் மரணமடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுந்தர் பண்டிட் என்ற இந்த நபரை மறுநாள் அவரது சகோதரர் எழுப்ப முயன்றுள்ளார். ஆனால் சுந்தர் மயக்கமடைந்து கிடந்துள்ளார்.

உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவர் உயிரிழந்து விட்டார் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதன்பின்னர் அவரது உடலை குடும்பத்தினர் தகனம் செய்து இறுதி சடங்குகளையும் செய்து விட்டனர். போலீஸில் மர்ம மரணம் தொடர்பாக புகார் அளிக்காமலேயே உடலை தகனம் செய்துள்ளனர்.

எனினும், இந்த சம்பவம் பற்றி அறிந்து போலீசார் அடிப்படை தகவலை திரட்டியுள்ளனர். அதில் சில விவரங்கள் போலீசாருக்கு கிடைத்துள்ளன. சுந்தர் பண்டிட், பரோலா என்ற கிராமத்தில் வசித்து வந்துள்ளார்.

இதுதவிர செக்டார் 107ல் அவருக்கு மற்றொரு வீடு உள்ளது. வார இறுதியில் அங்கு வருவது அவருக்கு வழக்கம். அவரது வீட்டின் கீழ் பகுதியில் காரை நிறுத்தும் இடம் உள்ளது. அதில் காரை நிறுத்தி விட்டு குடிபோதையில் அதிலேயே தூங்கி இருக்கிறார்.

அவருக்கு குடிப்பழக்கம் உள்ளது என்று சுந்தரின் குடும்பத்தினரும் தெரிவித்து உள்ளனர். இந்த சூழலில் காரின் இன்ஜினில் இருந்து வெளிவந்த கார்பன் மோனாக்சைடு போன்ற விஷ வாயுவை அவர் சுவாசித்து இருக்க கூடும் என போலீசார் தெரிவித்து உள்ளனர், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்