மாட்டுச் சாணத்தினால் தயாரிக்கப்பட்ட சுற்றுச்சூழலைப் பாதிக்காத 33 கோடி தீப விளக்குகளை வரும் தீபாவளிக்குள் மக்கள் பயன்பாட்டுக்காக சந்தைக்குக் கொண்டுவர ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக் இலக்கு வைத்துள்ளது.
சீன தயாரிப்புகளின் ஆதிக்கத்தை முறியடிப்பதற்காக இந்த மாட்டுச்சாண உபயோகப் பொருட்களை தயாரிக்கவுள்ளதாக இந்த ஆயோக்கின் சேர்மன் வல்லபாய் காத்திரியா தெரிவித்தார்.
2019-ம் ஆண்டு நாட்டின் கால்நடைகளை பாதுகாக்க இந்த ஆயோக் உருவாக்கப்பட்டது. மாட்டுச்சாணத்தினால் தயாரிக்கப்படும் பொருட்களை பயன்படுத்தக் கோரி நாடுதழுவிய விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் இந்த ஆயோக் தொடங்கி விட்டது.
“பிரதமர் மோடியின் தற்சார்பு மற்றும் மேக் இன் இந்தியா கொள்கைக்கு வலுச் சேர்க்கும் விதமாக சீனத் தயாரிப்பு விளக்குகளை முறியடிக்க இந்த மாட்டுச் சாண தயாரிப்புகள் கொண்டு வரப்படுகின்றன” என்றார் ஆயோக் சேர்மன் கதிரியா.
இதன் மகத்துவத்தை உணர்த்தும் விதமாக அயோத்தியில் 3 லட்சம் மாட்டுச்சாண விளக்குகளும் வாரணாசியில் 1 லட்சம் விளக்குகளும் ஏற்றப்படவுள்ளன. 33 கோடி விளக்குகளைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளோம், தீபாவளிக்கு சந்தைக்குக் கொண்டு வர திட்டமிட்டுள்ளோம்.
இந்தியாவில் நாளொன்றுக்கு 192 கோடி கிலோ மாட்டுச் சாணம் உற்பத்திச் செய்யப்படுகிறது. மாட்டுச் சாணப் பொருட்களுக்கான இதுவரை இல்லாத பயன்பாட்டை எதிர்நோக்குகிறோம். இதன் உற்பத்தியில் நாங்கள் நேரடியாக இறங்கவில்லை என்றாலும் சுய உதவிக்குழுக்கள் சுயதொழில் செய்ய முனைவோர்களை ஊக்குவித்து வருகிறோம்.
மாட்டுச் சாணம் மட்டுமல்லாது, மாட்டு சிறுநீர், பால் போன்றவற்றிலும் பொருட்களை தயாரிக்கவுள்ளோம்.
இதில் கதிர்வீச்சு தடுப்பு சிப், பேப்பர் வெயிட்டுகள், விநாயகர் மற்றும் லஷ்மி கடவுளர் விக்ரகங்கள், அகர்பத்திகள். மெழுகுவர்த்திகள் மற்றும் சில பொருட்களை திட்டமிட்டுள்ளோம்.
மாட்டுச்சாணம் அனைவரையும் பாதுகாக்கும். அது கதிர்வீச்சைத் தடுக்கும். எனவே கதிர்வீச்சுத் தடுப்பு மாட்டுச் சாண சிப்களை மொபைல் போன்களில் பயன்படுத்தி கதிர்வீச்சிலிருந்து காத்துக் கொள்ளுங்கள், இது நோயிலிருந்து பாதுகாப்பதாகும்.
இது கிராமப்புற வேலை வாய்ப்பைப் பெருக்கும். இது தொடர்பாக பிரச்சாரத்துக்காக வெபினார்கள் மூலம் விவசாயிகள், கோசாலை வைத்திருப்போர் மற்றும் தொழில் முனைவோர் ஆகியோரை ஒன்று திரட்டி வருகிறோம், என்றார் வல்லப்பாய் காத்திரியா.
முக்கிய செய்திகள்
இந்தியா
11 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago