இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க வேண்டும் எனக் கோரி ஒரு சாது சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் இன்று தொடங்கியுள்ளார்.
உத்திரப்பிரதேசம் அயோத்தியை சேர்ந்த இவர் ஏற்கெனவே ராமர் கோயிலுக்காக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியவர்.
அயோத்தியின் தபஸ்வீ மடத்தின் சாதுவாக இருப்பவர் மஹந்த பரமஹன்ஸ் தாஸ். இவர் இரண்டு வருடங்களுக்கு முன் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் எனக் கோரி சாகும்வரை உண்ணாவிரதம் நடத்தி இருந்தார்.
இதன்மூலம், சற்று பிரபலமான இந்த சாது மீண்டும் ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தை சாகும்வரை எனத் தொடங்கி உள்ளார். இதற்காக அவர், அயோத்தியின் ராம் ஜானகி கோயிலின் முன்பாக இன்று முதல் அமர்ந்திருக்கிறார்.
» 2024-ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் மூலம் தண்ணீர்: மத்திய அரசு உறுதி
» தற்சார்பு இந்தியா என்பதே முன்னேறுவதற்கான ஒரே பாதை; ரமேஷ் பொக்ரியால் பேச்சு
இந்தமுறை அது, இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி துவக்கி உள்ளார். தனது கோரிக்கை நிறைவேறும் வரை தனது போராட்டத்தை முடிக்கப்போவதில்லை என்றும் அந்த சாது அறிவித்துள்ளார்.
முன்னதாக அவர் இதன் மீதான கடிதம் ஒன்றையும் எழுதி குடியரசு தலைவர், பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் உ.பி. முதல்வர் ஆகியோருக்கு அனுப்பி இருந்தார்.
இரண்டாம் முறையாக ஆட்சிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. இதேவகையில், இந்தியாவை இந்து நாடாகவும் அறிவிக்க சாதுவான மஹந்த் பரமஹ்ன்ஸ் வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து தனது கடிதத்தில் மஹந்த் பரமஹன்ஸ் குறிப்பிடுகையில், ‘‘மதத்தின் அடிப்படையில் தான் சுதந்திரத்திற்கு பின் நம் நாடு பிரிக்கப்பட்டுள்ளது. எனினும், முஸ்லிம்கள் இந்தியாவில் இன்னும் வாழ்ந்துவருகிறார்கள்.
எனவே, பிரிவினையால் எந்தப் பலனும் இல்லை என்பதால், பாகிஸ்தான் மற்றும் வங்கதேச நாடுகளை இந்தியாவுடன் ஒன்றிணைக்க வேண்டும். தனது கோரிக்கையில் நியாயம் இல்லை என்றால், அவை மதத்தின் அடிப்படையில் பிரித்தது ஏன்? என விளக்க வேண்டும்.’’ என்று வலியுறுத்தி உள்ளார்.
இந்தியாவில் இந்து கலாச்சாரத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் முஸ்லிம்கள் மட்டுமே இங்கு இருக்க வேண்டும் எனவும், மற்றவர்களை பாகிஸ்தான் மற்றும் வங்கதேச நாடுகளுக்கு அனுப்பப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
ராமர் கோயிலுக்காக மஹந்த் பரமஹன்ஸ் கடந்த அக்டோபர் 1, 2018 முதல் உண்ணாவிரதம் இருந்தார். இதன் 12 தினங்களுக்கு பிறகு அவரது உடல்நிலை குன்றியதால் அயோத்தியில் இருந்து லக்னோவின் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு உ.பி. முதல்வர் யோகி நேரில் வந்து மஹந்த் பரமஹன்ஸை சந்தித்தார். பிறகு அவரை சமாதானப்படுத்தி பழச்சாறு அருந்த வைத்து உண்ணாவிரதத்தை முடிக்க வைத்திருந்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago