உத்தரபிரதேசத்தில் சாதி வெறுப்பை காங்கிரஸ் தூண்டுவதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் குற்றம்சாட்டியுள்ளார்.
உ.பி. மாநிலம் ஜான்பூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு அடுத்த மாதம் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி, அங்கு நடந்த பாஜக தொண்டர்கள் கூட்டத்தில் யோகி ஆதித்யநாத் பேசியதாவது:
கரோனா காலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்ப நாம் தீவிர நடவடிக்கை எடுத்து வந்தோம். ஆனால், காங்கிரஸ் கட்சி தொழிலாளர்களுக்காக பஸ்களை இயக்குவதாகக் கூறி, சதி வேலையில் ஈடுபட்டது. பஸ்களுக்கு பதிலாக ஸ்கூட்டர்கள், ஆட்டோக்களின் நம்பர்களை கொடுத்து ஏமாற்றியது. செயலிழந்த லாரிகளை கொடுத்து மக்களின் உயிரோடு காங்கிரஸ் விளையாடியது. அந்த சதி அதோடு முடிந்துவிடவில்லை.
காங்கிரஸ் தொடர்ந்து சதி வேலையில் ஈடுபட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சி மக்களிடையே சாதி வெறுப்பைத் தூண்டி விடுகிறது. எனது அரசு பதவி ஏற்றதில் இருந்தே சாதிக் கலவரத்தை தூண்டிவிட சதி நடக்கிறது. ஆனால், அந்த சதியை முறியடித்து வருகிறோம். பகுஜன் சமாஜ் கட்சியும் சமாஜ்வாதி கட்சியும் தங்களது 15 ஆண்டு ஆட்சிக் காலத்தில் மாபியா கும்பலை வளர்த்தன. சட்ட விரோத கும்பல்களுக்கு எதிராக பாஜக அரசு கடும் நடவடிக்கை எடுத்து மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago