சுவிஸ் வங்கியில் பணம் பதுக்கியுள்ள இந்தியர்களின் 2-வது பட்டியல்: ஒப்பந்தப்படி மத்திய அரசிடம் பகிர்ந்தது சுவிட்சர்லாந்து

By செய்திப்பிரிவு

சுவிஸ் வங்கியில் பணம் பதுக்கி யுள்ள இந்தியர்களின் 2-வது பெயர் பட்டியலை மத்திய அரசிடம் அந்த வங்கி அளித்துள்ளது. இந்தியா – சுவிட்சர்லாந்து நாடுகள் இடையே செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், தானியங்கி முறையில் தகவல் பரிவர்த்தனை செய்து கொள்ளும் விதிமுறையின் கீழ் இந்தப் பட்டியல் அளிக்கப்பட் டுள்ளது.

சுவிட்சர்லாந்தின் பெடரல் வரி நிர்வாகத்துடன் இந்தியா உள்ளிட்ட 86 நாடுகள் ஒப்பந்தம் செய்துள் ளன. சர்வதேச நிதி கணக்கியல் தகவல் பகிர்வு ஒப்பந்தத்தின் அடிப் படையில் அந்நாட்டில் பணத்தை பதுக்கியுள்ளவர்கள் விவரத்தை அந்தந்த நாடுகளுக்கு அளிக்க இந்த ஒப்பந்தம் வகை செய்துள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பரில் சுவிட்சர்லாந்திடம் இருந்து முதலா வது விவரப் பட்டியல் மத்திய அரசுக்கு கிடைத்தது. இந்த ஆண்டு பகிர்ந்து கொள்ளப்பட்ட விவரங்களின் அடிப்படையில் சுவிஸ் வங்கி மூலம் பகிரப்பட்ட கணக்குகளின் எண்ணிக்கை 31 லட்சமாகும். கடந்த ஆண்டு 75 நாடுகளி டையே, இதே எண்ணிக்கையிலான கணக்குகள்தான் பகிரப்பட்டுள்ளன.

பகிரப்பட்ட கணக்குகளில் இந் தியர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளார்களா, மொத்தம் தொகை எவ்வளவு என்பன போன்ற விவரங்கள் வெளியிடப்பட வில்லை. சுவிஸ் வங்கி மற்றும் பிற சுவிஸ் நிதி நிறுவனங்களில் செலுத் தப்பட்ட பண விவரங்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் இடம்பெற் றுள்ளவர்களில் இந்தியர்களின் எண்ணிக்கையும் கணிசமான அளவுக்கு உள்ளதாக அதிகாரி கள் தெரிவித்துள்ளனர்.

நிதி முறைகேடு மற்றும் வரி ஏய்ப்பு உள்ளிட்ட விவகாரங்களில் சிக்கியவர்கள் தொடர்பாக மேற் கொள்ளப்பட்ட விசாரணை அடிப் படையில் இந்த விவரங்கள் கோரி பெறப்பட்டன. இவ்விதம் பெறப் பட்ட விவரங்கள் அனைத்துமே 2018-ம் ஆண்டுக்கு முன்பு கணக்கை முடித்த நபர்கள் மற்றும் நிறுவனங்கள் பற்றியதாகும்.

நிதி பதுக்கல் முறைகேடு தொடர் பான பல வழக்குகள் பனாமா, பிரிட் டிஷ் வர்ஜின் தீவுகள் மற்றும் கேமன் தீவுகள் உள்ளிட்ட இடங்களில் உள்ள நிறுவனங்கள் தொடர்புடை யவையாகும். இது தவிர பெரும் கோடீஸ்வரர்கள், அரசியல் பிர முகர்கள், அரச வம்சத்தினர் உள் ளிட்டோர் பதுக்கிய பண விவரங்கள் சார்ந்த வழங்குகளாகும்.

பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்தியர்கள் விவரம், தொடர்புள்ள சொத்து மதிப்பு, கணக்குகளின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங் களை வெளியிட இந்திய அதிகாரி கள் மறுத்துவிட்டனர். இந்த விவரங் களை வெளியிடக் கூடாது என்று இருதரப்பு ஒப்பந்தம் செய்யப்பட்ட தன் அடிப்படையில் அரசிடம் அளிக் கப்பட்ட விவரங்கள் வெளியிடப்பட வில்லை.

சுவிஸ் அதிகாரிகள் அளித் துள்ள விவர பட்டியலில் பணம் பதுக்கியவர்கள் பற்றிய விவரம், அவர்களின் கணக்குகள், போடப் பட்ட பண மதிப்பு, முகவரி, நாடு, வரி குறியீடு எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இடம்பெற்றுள்ளன.

இவ்விதம் தரப்பட்டுள்ள விவரங் களின் அடிப்படையில், சம்பந்தப் பட்டவர்கள் செலுத்திய வரி விவரம் உள்ளிட்டவற்றை வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்வர். சம்பந்தப்பட்ட நபர்கள் உரிய விவரங்களை தாக்கல் செய்து அதற்குரிய வரி செலுத்தியுள்ளனரா என்பதும் ஆராயப்படும். அடுத்த விவரப்பட்டியல் 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கிடைக்கும்.

ஏற்கெனவே இந்தப் பட்டியலில் 75 நாடுகள் இடம்பெற்றிருந்தன. தற்போது புதிதாக அங்குய்லா, அருபா, பஹாமாஸ், பஹ்ரைன், கிரெனடா, இஸ்ரேல், குவைத், மார்ஷல் தீவுகள், நவ்ரு, பனாமா, ஐக் கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 11 நாடுகள் சேர்ந்துள்ளதால் இந்தியா உள்ளிட்ட 86 நாடுகளுக்கு இந்த விவர பட்டியல் அளிக்கப்பட வேண்டும்.

சுவிஸ் பெடரல் வரி அமைப் புடன் (எப்டிஏ) 66 நாடுகள்தான் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. இதன்படி பரஸ்பரம் 66 நாடுகளும் தங்களிடையிலான வர்த்தகம் மட்டுமின்றி தகவல்களை பரிமாறிக் கொள்ள இது வழிவகுக்கிறது. எஞ்சியுள்ள 20 நாடுகளிடம் இருந்து சுவிஸ் அரசுக்கு கோரிக்கை வந்த போதிலும் அவை சர்வதேச விதி முறைகளை கடைபிடிக்கவில்லை என்பதால் அவற்றுக்கு வழங்கப்பட வில்லை. தகவல் பாதுகாப்பு (9 நாடுகள்), தகவல் தொகுப்புகளை பெற விரும்பாத நாடுகள் (11) என்ற அடிப்படையில் இவற்றுக்கு விவரங்களை சுவிஸ் அரசு வழங்கவில்லை.

தற்போது 8,500 நிதி நிறுவனங் கள் (வங்கிகள், அறக்கட்டளைகள், காப்பீடுதாரர்கள்), தாராள வர்த் தக ஒப்பந்தத்தின்கீழ் பதிவு செய்துள்ளன. இவை தகவலை திரட்டி அதை எப்டிஏ-வுக்கு அளிக்கும். கடந்த ஆண்டு இந்த நிறுவனங்களின் எண்ணிக்கை 7,500 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுவரை 31 லட்சம் நிதி கணக்குகள் குறித்த விவரங்களை எப்டிஏ பகிர்ந்துள்ளது. இந்த விவரங்களில் அதில் சம்பந்தப்பட்டுள்ள நிதி மற் றும் சொத்து விவரங்கள் இடம் பெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நிதி தகவல் பகிர்வு தர மதிப்பின்படி தகவல்களை அளிக்க சுவிஸ் அரசு ஒப்புக்கொண் டது. இதன்படி, 2017-ம் ஆண்டிலிருந்து எப்டிஏ-வுடன் ஒப்பந்தம் செய்த நாடுகளுக்கு தகவல்களை பகிர்ந்து கொள்ள முடிவு செய் துள்ளது.

எப்டிஏ-வுடன் மேற்கொள்ளப் பட்ட ஒப்பந்தப்படி பெறப்பட்ட தக வல்கள், வரி ஏய்ப்பு செய்த பிர பலங்கள் மீது வழக்கு தொடர் வதற்கு மிகவும் உதவிகரமாக இருந் துள்ளதாக அதிகாரிகள் தெரிவித் துள்ளனர். தொழிலதிபர்கள், வெளி நாடு வாழ் இந்தியர்கள் உள் ளிட்டோர் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக அதிகாரிகள் சிலர் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்