இந்திய கிராமங்களில் மாற்றத்தை ஏற்படுத்தவும், மற்றும் பல லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு அதிகாரம் வழங்கும் வகையிலும் ஸ்வாமித்வா திட்டத்தின் கீழ் சொத்து அட்டைகளை பயனாளிகளுக்கு நேரடியாக வழங்கும் முக்கிய நிகழ்வை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் அக்டோபர் 11-ம்தேதி தொடங்கி வைக்கிறார்.
மொபைல் போன்கள் வழியே அனுப்பப்படும் குறுஞ்செய்தி இணைப்பின் வழியே சொத்து அட்டைகளை பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதியை, ஒரு லட்சம் சொத்து உடமையாளர்கள் பெறும் வசதி தொடங்கப்பட உள்ளது. அதன்பின் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் சார்பில் சொத்து அட்டைகள் நேரடியாக வழங்கப்படும்.
கர்நாடகாவில் 2, உத்தரகாண்ட்டில் 50, மத்தியபிரதேசத்தில் 44, மகாராஷ்டிராவில் 100, ஹரியாணாவில் 221, உத்தர பிரதேசத்தில் 346 என 6 மாநிலங்களின் 763 கிராமங்களைச் சேர்ந்தவர்கள் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறுகின்றனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தைத்தவிர மேற்குறிப்பிட்ட இதர மாநிலங்களைச் சேர்ந்த பயனாளிகள் ஒரு நாளுக்குள் சொத்து அட்டைகளை பெறுவார்கள். சொத்து அட்டைகள் வழங்க குறைந்த பட்சத்தொகையை வசூலிக்கும் ஒரு முறையை மகாராஷ்டிரா அரசு தொடங்க உள்ளதால், இந்த திட்டம்அந்த மாநிலத்தில் தொடங்குவதற்கு ஒரு மாதம் ஆகும்.
» உத்தரகாண்டில் கோவிட் பாதிப்பைத் தடுக்க தொடர்ந்து விழிப்புணர்வு பிரச்சாரம்: ராவத்
» கோவிட் சிசிச்சை; ஒரு மாதத்துக்குப்பின் 9 லட்சத்துக்கும் கீழ் குறைந்தது
கடன் பெறவோ அல்லது இதர நிதி பயன்பாடுகளுக்காகவோ கிராம மக்கள், தங்களது சொத்துகளை, ஒரு நிதி சொத்தாக உபயோகிப்பதற்கு இந்த நடவடிக்கை வழி வகுக்கும். தவிர பல லட்சக்கணக்கிலான கிராம சொத்து உடமையாளர்கள் பயன் அடையும் வகையில் மிகவும் நவீன முறையிலான தொழில்நுட்பத்துடன் கூடிய இதுபோன்ற பெரிய அளவிலான நடைமுறை இதுவரை இல்லாத வகையில் முதன் முறையாக மேற்கொள்ளப்படுகிறது.
இந்த நிகழ்வின்போது பிரதமர் சில பயனாளிகளுடன் உரையாட உள்ளார். மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சரும் இந்த நிகழ்வில் பங்கேற்க உள்ளார். இந்த நிகழ்வு அக்டோபர் 11-ம் தேதி காலை 11 மணிக்குத் தொடங்கும்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
1 hour ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
1 day ago