ராகுல் காந்திக்கு விவசாயத்தை பற்றி எதுவுமே தெரியாது, வெங்காயம் விளைவது மண்ணுக்கு உள்ளேயா அல்லது வெளியிலா என்பது கூட அவருக்கு தெரியாது என மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் விமர்சித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை எதிர்த்தும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநிலங்களின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநிலங்களில் காங்கிரஸ் சார்பில் நடந்த போராட்டத்தில் அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி டிராக்டர் பேரணியில் பங்கேற்றார்.
அப்போது அவர் டிராக்டரில் அமர்ந்து வந்தார். அவர் டிராக்டரில் வைக்கப்பட்டிருந்த சோபாவில் அமர்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை பாஜகவினர் விமர்சித்து வருகின்றனர்.
» புதிய வேளாண் சட்டங்கள்; இந்திய விவசாயிகளின் வாழ்க்கை முறையே மாறும்: ஜிதேந்திர சிங் உறுதி
» சாதி மனப்பான்மை கொண்டவர்களிடமிருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: மாயாவதி
இதுகுறித்து மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கூறியதாவது:
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விவசாயிகளுடன் போராட்டத்தில் கலந்து கொள்கிறார். டிராக்டருக்குள் வைக்கப்பட்டுள்ள சோபாவில் அமர்ந்து பயணம் செய்கிறார். இது அனைத்தும் நாடகமே. அவருக்கு விவசாயத்தை பற்றி எதுவுமே தெரியாது. வெங்காயம் விளைவது மண்ணுக்கு உள்ளேயா அல்லது வெளியிலா என்பது கூட அவருக்கு தெரியாது.’’ எனக் கூறினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
14 mins ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago