ரஷ்யாவின் கரோனா தடுப்பு மருந்தை பெரிய அளவில் சோதனை செய்ய மத்திய அரசு அனுமதி மறுப்பு

By செய்திப்பிரிவு

கரோனா தொற்றுக்கு ‘ஸ்புட்னிக் வி' என்ற பெயரில் தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளது ரஷ்யா. இதற்கு இன்னும் உலக சுகாதார அமைப்பின் அனுமதி கிடைக்கவில்லை.

இதனிடையே, ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்தை இந்தியாவில் ஆய்வகத்தில் பரிசோதனை செய்யவும் விநியோகம் செய்யவும் ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிதியத்துடன், ஹைதராபாத்தை சேர்ந்த டாக்டர் ரெட்டிஸ் லேபரட் டரிஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்தது.

ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்தை இந்தியாவில் பரிசோதனை செய்ய மத்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு அமைப்பிடம் அனுமதி பெற வேண்டும். இதற்காக அனுமதி கோரி தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்திடம் டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரிஸ் நிறுவனம் விண்ணப்பித்தது.

இதைப் பரிசீலித்த மத்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு அமைப்பு, அந்த மருந்தை பெரியஅளவில் பரிசோதனை செய்ய அனுமதி மறுத்துள்ளது. மருந்தின் பாதுகாப்பான தன்மை, நோய் எதிர்ப்பு திறன் குறித்து முதலில் சிறிய அளவில் பரிசோதிக்குமாறு மத்திய மருந்துகள் தரக்கட்டுப் பாட்டு அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

இந்தியாவின் இந்த நடவடிக்கையால் முழுமையான பரிசோதனைகளுக்கு முன்பாகவே தடுப்பு மருந்தை விநியோகிக்கலாம் என்ற ரஷ்யாவின் திட்டத்துக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

மேலும்