கோவிட்-19-க்கு எதிரான போரில் பிரதமர் நரேந்திர மோடியின் மக்கள் இயக்கத்தில் இணையுமாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "கோவிட்-19 போன்ற ஒரு உலகப் பெருந்தொற்றை எதிர்த்துப் போரிடுவதற்கு மக்கள் அனைவரும் ஒன்று திரள வேண்டும்.
எனவே, பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்டுள்ள இந்த மக்கள் இயக்கத்தில் நாம் அனைவரும் இணைந்து, கோவிட்-19 பற்றிய விழிப்புணர்வை பரப்பி, இந்தியாவை கொவிட்-19 இல்லாத நாடாக மாற்றுவதற்கு முக்கிய பங்காற்றுவோம்," என்று தெரிவித்துள்ளார்.
"கோவிட்-19 இடம் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கு மூன்று வழிகள் தான் இருக்கின்றன. அவை முகக் கவசம் அணிதல், இரண்டு அடி தனிநபர் இடைவெளியை கடைப்பிடித்தல் மற்றும் கைகளை அடிக்கடி கழுவுதல் ஆகும்.
» ஹாத்ரஸ் பலாத்காரக் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்
உங்களை மட்டுமில்லாமல் உங்களது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உடன் பணிபுரிபவர்களை கோவிட்-19 இடம் இருந்து பாதுகாக்க பிரதமர் நரேந்திர மோடியின் இந்த 3 அறிவுரைகளை தவறாமல் பின்பற்றுங்கள்," என்று உள்துறை அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
2 days ago
இந்தியா
2 days ago