காங்கிரஸ் எம்.பி டி.கே.சுரேஷூக்கு கரோனா தொற்று உறுதி: பரிசோதனை செய்துகொள்ளுமாறு சிபிஐ அதிகாரிகளுக்கு கோரிக்கை

By இரா.வினோத்

சிபிஐ சோதனைக்கு ஆளான கர்நாடக காங்கிரஸ் எம்.பி டி.கே.சுரேஷூக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது அதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்பட்டுத்தியுள்ளது.

கர்நாடக மாநில‌ காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார், அவரது சகோதர‌ரும் பெங்களூரு ஊரகத் தொகுதி காங்கிரஸ் எம்.பி.,யுமான டி.கே.சுரேஷ் உள்ளிட்டோருக்கு சொந்தமான 14 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று முன்தினம் சுமார் 14 மணி நேரம் சோதனை நடத்தினர்.

இந்த சோதனை நடத்தப்பட்ட அடுத்த நாள் (நேற்று) டி.கே.சுரேஷ் தனக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

இதுகுறித்து டி.கே.சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், ''எனக்கு அறிகுறிகள் அற்ற கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டடுள்ளேன்.

கடந்த சில தினங்களாக என்னுடன் தொடர்பில் இருந்த உறவினர்கள், நண்பர்கள், தொண்ட‌ர்கள் உள்ளிட்டோர் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அதேபோல என் வீட்டில் சோதனை நடத்திய சிபிஐ அதிகாரிகள் மற்றும் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த பத்திரிகையாளர்கள் ஆகியோரையும் கரோனா ம் பரிசோதனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்'' எனப் பதிவிட்டுள்ளார்.

இதனால் சிபிஐ அதிகாரிகளும், பத்திரிகையாளர்களும் கலக்கம் அடைந்துள்ளனர்.

கடந்த மாதம் கரோனா தொற்றுக்கு ஆளான ‌‌டி.கே. சிவகுமார் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பினார்.

கர்நாடகாவில் மொத்தமாக‌ கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6.4 லட்சத்தை கடந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்