உத்தரபிரதேச மாநிலம் ஹாத்ரஸில் சமீபத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தாக்கப்பட்ட இளம்பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், பாஜக தொழில்நுட்பப் பிரிவு தலைவர் அமித் மாளவியா, நடிகை ஸ்வரா பாஸ்கர் ஆகியோர் தங்கள் ட்விட்டர் பதிவில் இறந்த பெண்ணின் அடையாளத்தை வெளியிட்டிருந்தனர். இதற்காக, இந்த மூவருக்கும் விளக்கம் கேட்டு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
அதில், ‘‘இந்திய குற்றவியல் சட்டம், பிரிவு 228 ஏ (2)ன் கீழ் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்கள் குறித்த அடையாளங்களை வெளியிட உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தடை விதித்துள்ளது.
இந்நிலையில், ஹாத்ரஸில் பலாத்காரம் செய்யப்பட்டு இறந்த பெண் குறித்த அடையாளத்தை ட்விட்டரில் வெளியிட்டது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்’’ என்று கோரியுள்ளது. மேலும், பெண்ணின் அடையாளத்தை வெளியிட்ட சம்பந்தப்பட்ட ட்விட்டர் பதிவை உடனடியாக நீக்குமாறு மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago