கரோனா பாதிப்பு; சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 13.75 சதவீதமாக குறைந்தது

By செய்திப்பிரிவு

கரோனா நோய் தொற்றில் தற்சமயம் பாதிக்கப்பட்டவர்கள் விகிதம் இந்தியாவில் சீரான அளவில் குறைந்து வருகிறது

கரோனா நோயாளிகளின் மொத்த விகிதத்தில் தற்சமயம் பாதிக்கப்பட்டவர்கள் விகிதம் இந்தியாவில் சீரான வகையில் குறைந்து வருகிறது. நாட்டின் மொத்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,19,023 ஆக இருக்கும் நிலையில் தற்சமயம் பாதிக்கப்பட்டவர்கள் வெறுமனே 13.75 சதவிகிதமாக இருக்கிறது.

நோய்தொற்றில் இருந்து குணம் அடைவோரின் சதவிகிதம் அதிகரிப்பதுடன் ஒப்பிடும்போது தற்சமயம் பாதிக்கப்பட்டவர்களின் விகிதம் குறைவான போக்கில் உள்ளது.

மொத்த குணம் அடைந்தோரின் எண்ணிக்கை 56,62,490 ஆக இருக்கிறது. குணம் அடைவோர் மற்றும் தற்சமயம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆகியவற்றுக்கு இடையேயான இடைவெளி 47 லட்சத்தைக் கடந்துள்ளது. (47,43,467). குணம் அடைவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், தொடர்ந்து இந்த வித்தியாசம் அதிகரிக்கிறது.

அதிக எண்ணிக்கையில் குணம் அடைவோரின் எண்ணிக்கை என்பது தேசிய குணமடைவோர் விகிதத்தில் 84.70% ஆக முன்னேற்றம் அடைய உதவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 75,787 பேர் குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். புதிய நோய் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 61,267 ஆக இருக்கிறது.

25 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் புதிதாக நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையை விடவும் குணம் அடைவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

16 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்