செயற்கை நுண்ணறிவின் சர்வதேச மையமாக இந்தியா மாற வேண்டும்: பிரதமர் மோடி விருப்பம்

By செய்திப்பிரிவு

ரெய்ஸ் 2020-ஐந்து நாட்கள் நடைபெறும் ரெய்ஸ் 2020 சர்வதேச செயற்கை நுண்ணறிவு மாநாட்டை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, இந்தியாவை உலகின் செயற்கை நுண்ணறிவு மையமாக உருவாக்கக் கடைமைப்பட்டிருப்பதாக கூறினார்.

சமூக அதிகாரத்துக்கான பொறுப்பான செயற்கை நுண்ணறிவு 2020 என்ற ரெய்ஸ் 2020 மாநாட்டை நேற்று மாலை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

அப்போது மத்திய மின்னணு & தகவல் தொழில்நுட்பம், தகவல் தொடர்புகள் மற்றும் சட்டம் & நீதித்துறையின் அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், ரூரிங், பத்ம பூஷன் விருதுகள் பெற்ற பேராசிரியர் ராஜ் ரெட்டி, அமெரிக்க அதிபருக்கான தகவல் தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் முன்னாள் துணைத்தலைவர் மற்றும் ரிலையன்ஸ் தொழிலகங்கள் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, ஐபிஎம் இந்தியாவின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் அரவிந்த் கிருஷ்ணா, நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி அமித் காந்த், மின்னணு & தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் செயலாளர் அஜய் பிரகாஷ் ஷாஹெனி ஆகியோரும் உடன் பங்கேற்றனர். அக்டோபர் 5-9-ம் தேதிவரை 45 அமர்வுகளாக இந்த மாநாடு நடைபெற்று வருகிறது. அரசு, தொழில்துறை மற்றும் கல்விநிறுவனங்களின் சார்பில் 300 பேச்சாளர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “வரலாற்றின் ஒவ்வொரு படியிலும் அறிவு மற்றும் கற்றலில் உலகத்தை இந்தியா வழிநடத்தி இருக்கிறது. அதே போல இன்றைய தகவல் தொழில்நுட்ப காலகட்டத்திலும் இந்தியா சிறந்த பங்களிப்புகளை வழங்கி உள்ளது” என்று அழுத்தமாக குறிப்பிட்டார்.

உலகத்தின் செயற்கை நுண்ணறிவு மையமாக இந்தியாவை உருவாக்க தாம் கடைமைப்பட்டிருப்பதாகவும் அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார். சர்வதேச தகவல் தொழில்நுட்ப சேவைத் தொழிலில் அதிகாரம் படைத்த தாக இந்தியா திகழ்வது நிரூபிக்கப்பட்டுள்ளது. நாம் தொடர்ந்து டிஜிட்டல் முறையிலும் சிறந்து விளங்கி உலகை மகிழ்விக்க வேண்டும். செயற்கை நுண்ணறிவின் சர்வதேச மையமாக இந்தியா மாற வேண்டும் என்று நாம் விரும்புகின்றோம். இந்த துறையில் பல இந்தியர்கள் ஏற்கெனவே பணியாற்றி வருகின்றனர்.

இன்னும் வரும் காலகட்டத்தில் மேலும் பலர் இதனை மேற்கொள்வார்கள் என்று நான் நம்புகின்றேன். குழுவாகப் பணியாற்றுதல், நம்பிக்கை, ஒத்துழைப்பு, பொறுப்புடைமை மற்றும் பங்கேற்பு ஆகிய முக்கிய கொள்கைகளுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் நமது அணுகுமுறை இருக்க வேண்டும்,” என்று விரும்புவதாக மோடி கூறினார்.

“செயற்கை நுண்ணறிவில் இந்தியாவின் தேசிய திட்டம் என்பது, சமூக பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் செயற்கை நுண்ணறிவை சரியான வழியை நோக்கி உபயோகப்படுத்தும் வகையிலான அர்ப்பணிப்பை கொண்டதாக இருக்க வேண்டும். மனிதனின் அறிவு எப்போதுமே செயற்கை நுண்ணறிவை விடவும் சில படிகள் மேலோங்கி இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். செயற்கை நுண்ணறிவு குறித்து நாம் ஆலோசிக்கும்போது, மனிதனின் கற்பனை திறன், மனிதனின் உணர்வுகள் தொடர்ந்து நமது சிறந்த வலுவாக இருக்க வேண்டும் என்பதில் நமக்குள் எந்த சந்தேகத்துக்கும் இடமளிக்கக் கூடாது. இயந்திரங்களை விடவும், அவைகள்தான் நம்மமுடைய தனிபட்ட நலன்களுக்கானவையாகும்.

செயற்கை நுண்ணறிவு இலகுவாக இருந்தாலும் கூட, நமது அறிவின் கலப்பு இன்றி அது மனிதனின் பிரச்னைகளை தீர்க்க முடியாது,” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 mins ago

இந்தியா

24 mins ago

இந்தியா

40 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

22 hours ago

மேலும்