ஒரே நாளில் இந்தியாவில் 61,267 பேருக்கு கரோனா தொற்று, 884 பேர் பலி: சுகாதார அமைச்சகம்

By பிடிஐ

கரோனா பாதிப்பு தினசரி எண்ணிக்கை 65,000த்திற்கும் கீழ் குறைந்து கடந்த 24 மணி நேரத்தில் 61,267 பேர் வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

கரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 56 லட்சத்தை கடந்து மொத்த நல விகிதம் 84.70% ஆக உள்ளது.

இருப்பினும் இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 66 லட்சத்து 85 ஆயிரத்து 82 ஆக உள்ளது, பலி எண்ணிக்கை 1 லட்சத்து 3 ஆயிரத்து 569 ஆக அதிகரித்துள்ளது, கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவுக்கு 884 பேர் பலியாகியுள்ளனர்.

கரோனாவிலிருந்து நலமடைந்தோர் எண்ணிக்கை 56 லட்சத்து 62 ஆயிரத்து 490 ஆக உள்ளது. மொத்தம் 9 லட்சத்து 19 ஆயிரத்து 23 பேர் தற்போது கரோனா சிகிச்சையில் இருக்கின்றனர். இது மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் 13.75% என்பது குறிப்பிடத்தக்கது.

கரோனா வைரஸினால் இறப்போர் விகிதம் 1.55 % ஆக உள்ளது.

செப்டம்பர் 28 ம்தேதி இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 60 லட்சத்தைக் கடந்துள்ள நிலையில், இன்றைய நிலவரப்படி 66 லட்சத்து 85 ஆயிரத்து 82 ஆக பாதிப்பு எண்ணிக்கை நிலவரம் உள்ளது.

ஐசிஎம்ஆர் கணக்குகளின்படி மொத்தம் 8 கோடியே, 10 லட்சத்து, 71 ஆயிரத்து 797 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன, அக்டோபர் 5ம் தேதி மட்டும் 10 லட்சத்து 89 ஆயிரத்து 403 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்