ராகுல்காந்தி ஒரு வி.ஐ.பி. விவசாயி என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி விமர்சித்து உள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை எதிர்த்தும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் நடத்தும் 3 நாள் டிராக்டர் பேரணி நேற்றுமுன்தினம் தொடங்கியது.
இரண்டாவது நாளாக நேற்றும் பஞ்சாபில் அவர் டிராக்டர் பேரணியில் பங்கேற்றார். அவரது இந்த டிராக்டர் பேரணியை மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி விமர்சித்து உள்ளார்.
“ராகுல்காந்தி டிராக்டரில் உட்காருவதற்கு சோபாவை பயன்படுத்துகிறார். அவரை போன்ற ‘வி.ஐ.பி. விவசாயி’களால் இடைத்தரகர்களின் பிடியில் இருந்து சிறு, குறு விவசாயிகளை விடுவிக்கும் சட்டத்தை ஆதரிக்க முடியாது” என்றார்
» உ.பி.யின் தாத்ரியில் அடித்து கொல்லப்பட்ட அக்லாக் வழக்கின் குற்றவாளி மீது துப்பாக்கி சூடு
» பாலியல் புகார் அளிக்க உ.பி.யில் இருந்து மகாராஷ்டிராவுக்கு 800 கி.மீ. பயணம் செய்த இளம்பெண்
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்த சட்டங்கள் குப்பையில் போடப்படும் என்று ராகுல்காந்தி கூறியது பற்றி கருத்து தெரிவித்த ஸ்மிருதி இரானி, ஆட்சிக்கு வரும் ராகுல்காந்தியின் கனவு ஒருபோதும் நிறைவேறாது.
நாடாளுமன்ற மரபுகளை மதிக்கும் இயல்பு அவரிடம் இல்லாத ஒன்று. நம் நாடாளுமன்றத்தை அவர் மதிப்பார் என்று நாம் கருத இடமில்லை” என்றார் ஸ்மிருதி இரானி.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago