பாலியல் வன்கொடுமை புகார் அளிப்பதற்காக இளம்பெண் ஒருவர், உத்தரபிரதேசத்தில் இருந்து மகாராஷ்டிராவுக்கு 800 கி.மீ. பயணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேபாள நாட்டைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர், உத்தரபிரேதச மாநிலம் லக்னோவில் உள்ள தனது தோழி ஒருவருடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். அந்த சமயத்தில், தோழியின் ஆண்நண்பரான பிரவீன் யாதவ் என்பவருடன் இந்தப் பெண்ணுக்கு தொலைபேசி மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. பிரவீன், துபாயில்தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இந்த சூழலில், பணம் கொடுக்கல் – வாங்கல் தொடர்பாக தோழிகளுக்கு இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதில்,நேபாளப் பெண்ணை அவரது தோழி கடுமையாக தாக்கியதாக தெரிகிறது.
இந்தச் சம்பவம் குறித்து துபாயில் உள்ள பிரவீனிடம் நேபாளப் பெண் கூறி அழுதுள்ளார். அப்போது அவருக்கு ஆறுதல் கூறிய பிரவீன், லக்னோவில் உள்ள ஒரு ஓட்டல்அறையில் தங்கும்படி கூறியிருக்கிறார். அதன்படி, அந்தப்பெண்ணும் குறிப்பிட்ட ஓட்டல் அறைக்கு சென்று தங்கியுள்ளார்.
இதையடுத்து, கடந்த வாரம் துபாயில் இருந்து புறப்பட்டு லக்னோ வந்த பிரவீன், நேபாளப்பெண்ணுக்கு போதை மாத்திரைகளை கொடுத்து அவரை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
மேலும், இதுதொடர்பாகபோலீஸில் புகார் அளிக்கக்கூடாது என்றும், மீறி அளித்தால் அவரது அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு விடுவதாகவும் கூறி மிரட்டி யுள்ளார்.
இந்நிலையில், பிரவீனுக்கு தெரியாமல் ஓட்டல் அறையில் இருந்து வெளியேறிய நேபாளப் பெண், மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள தனது தோழி வீட்டுக்கு சுமார் 800 கி.மீ. தூரம் பயணித்து, கடந்த 30-ம்தேதி வந்துள்ளார். பின்னர், நாக்பூரில் உள்ள கொராடி காவல் நிலையத்தில் பிரவீன் மீதும், தனது தோழி மீதும் அவர் புகார் அளித்தார்.
இதன்பேரில், முதல் தகவல்அறிக்கையை பதிவு செய்த நாக்பூர் போலீஸார், அப்பெண்ணை அழைத்துக் கொண்டு நேற்று முன்தினம் லக்னோ சென்றனர். பின்னர், அங்குள்ள சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் அந்த முதல் தகவல் அறிக்கையை சமர்ப்பித்தனர். இதன் அடிப்படை யில், தற்போது லக்னோ போலீ ஸார் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago