ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக் கிறார். அப்போது, பாஜக தலைமை யிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவது குறித்தும் அவர் பேசவிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு மக்களவைத் தேர்தலுடன் ஆந்திர சட்டப்பே ரவைக்கும் தேர்தல் நடந்தது. இதில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 175 சட்டப்பேரவை தொகுதிகளில் 151-ல் வெற்றி பெற்று, ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியை கைப்பற்றினார். இது போல் ஆந்திராவில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 22-ல் கட்சி வெற்றி பெற்றது.
தற்போது ஆந்திர மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை செயல் படுத்தி வரும் ஜெகன்மோகன், அடுத்தகட்ட அரசியல் வியூகத்தை வகுத்துள்ளார். இதன்படி நேற்று மாலை அவர் டெல்லி புறப்பட்டுச் சென்றார். இன்று காலை 10.30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச உள்ளார். இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.
மக்களவையில் 22 எம்.பி.க்களுடன் நான்காவது பெரிய கட்சியாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உள்ளது. புதிய வேளாண் சட்டத் திருத்த மசோதா உள்ளிட்ட பல்வேறு மசோதாக்கள் மற்றும் புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் நரேந்திர மோடி அரசுக்கு ஜெகன்மோகன் ஆதரவளித்துள்ளார். மாநிலங்கள வையிலும் 6 உறுப்பினர்களை கொண்டுள்ள ஒய்எஸ்ஆர் காங் கிரஸ், பாஜகவுக்கு ஆதரவாக இருந்து வருகிறது. சிவசேனா, சிரோன்மணி அகாலி தளம் ஆகிய கட்சிகள் தேசிய ஜனநாய கக் கூட்டணியில் இருந்து விலகி யுள்ளதால் ஜெகன்மோகனின் ஆதரவு மத்திய அரசுக்கு தேவைப் படுகிறது.
» கிசான் சம்மன் திட்டத்தில் இடைத்தரகர் கைது: சிபிசிஐடி போலீஸார் நடவடிக்கை
» இளநிலை அறிவியல் அதிகாரி பதவிக்கான சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்க: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
கடந்த செப்டம்பர் 22-ம் தேதி டெல்லி சென்ற ஜெகன்மோகன், உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். அப் போது பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று மாலை டெல்லியில் இருந்து அழைப்பு வந்ததால் ஜெகன்மோகன் அவசர அவசரமாக டெல்லி விரைந்தார். இன்று காலை பிரதமரை சந்திக்க உள்ளார்.
மத்திய அமைச்சரவையில் இடம்?
அப்போது, ஆந்திர மாநிலத் துக்கு போதிய நிதியுதவி கோரவுள் ளார். மாநிலப் பிரிவினையின்போது அறிவிக்கப்பட்ட உறுதிமொழி களை நிறைவேற்ற வேண்டும், தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் எனவும் அவர் வலியுறுத்த உள்ளார். அதேநேரத் தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவது குறித்தும் இருவரும் பேச உள்ளனர். ஒருவேளை தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் இணைந் தால் அக்கட்சிக்கு 3 மத்திய அமைச்சர் பதவிகள் வழங்கப்படும் என அக்கட்சி வட்டாரங்கள் தெரி வித்தன.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago