மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வானுக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவரது மகனும், லோக் ஜனசக்தி கட்சித் தலைவருமான சிராக் பாஸ்வான் தெரிவித்தார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் நேற்று கூறியிருப்பதாவது:
உடல்நலக்குறைவு காரணமாக எனது தந்தை ராம் விலாஸ் பாஸ்வான், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் அவருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவர் நலமாக இருக்கிறார். தேவைப்பட்டால், மேலும் ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில், எங்கள் குடும்பத்துக்கு பக்கபலமாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்தப் பதிவில் சிராக் பாஸ்வான் கூறியுள்ளார்.
விரைவில் நடைபெறவுள்ள பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் லோக் ஜனசக்தி (எல்ஜேபி) போட்டியிடுவதாக இருந்தது. ஆனால், ஐக்கிய ஜனதா தளத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தேர்தலில் எல்ஜேபி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago