பட்ஜெட்டில் விவசாயத்துக்கான ஒதுக்கீடு 10 ஆண்டில் 11 மடங்கு அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

மத்திய பட்ஜெட்டில் விவசாயத் துக்கான ஒதுக்கீடு கடந்த 10 ஆண்டுகளில் 11 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது என்று மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் தெரிவித்தார்.

டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதலீட்டு சந்தை, வர்த்தகப் பொருட்கள் சந்தை தொடர்பான 4-வது ஆண்டு மாநாட்டில் மத்திய அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் கலந்து கொண்டு பேசியதாவது:

2009-10-ம் நிதியாண்டில் வேளாண் துறைக்கு ரூ.12 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது. இது படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. இதன்படி, நடப்பு நிதியாண்டில் இது ரூ.1.34 லட்சம் கோடியாக அதிக ரிக்கப்பட்டுள்ளது. 2009-10-ம் நிதியாண்டைக் காட்டிலும் இது 11 மடங்கு அதிகமாகும்.

2014-ல் பிரதமர் மோடி தலைமையிலான அரசு பதவி யேற்றவுடன் கிராமங்கள் வளர்ச்சி, விவசாயிகள், ஏழைகள் மேம்பாடு, வேளாண் துறையின் வளர்ச்சிக்கு அக்கறை காட்டி வருகிறது.

வேளாண் துறையை மேம்படுத்த வேண்டும் என்ற காரணத்தால் அந்தத் துறைக்கு அதிக ஒதுக்கீட்டை மத்திய அரசு செய்து வருகிறது.

தற்போது கொண்டு வரப்பட்டுள்ள புதிய வேளாண் மசோதாக்களால் விவசாயிகள் தங்களது விளைபொருட்ளை நல்ல விலைக்கு விற்க முடியும். மேலும் வேற்று மாநிலங்களுக்கும் இதைக் கொண்டு சென்று விற்பனை செய்ய முடியும். இவ்வாறு அவர் பேசினார். - பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

53 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்