இந்தியாவில் கரோனா வைரஸ் காரணமாக இறந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்தது

By பிடிஐ

இந்தியாவில் கரோனா வைரஸ் நோயிற்கு இறந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்து சென்றது. பாதிப்பு மொத்த எண்ணிக்கை 64 லட்சத்து 73 ஆயிரத்து 544 ஆக உள்ளது.

குணமடைந்தோர் விகிதம் 54 லட்சத்தைக் கடந்துள்ளது, நலமடைந்தோர் விகிதம் 83.84% என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஒரே நாளில் 79 ஆயிரத்து 476 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது, இதனையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 64,73,544 என்று அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 1069 பேர் கரோனாவுக்குப் பலியாக மொத்தம் இறந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 842 ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 54,27,706 ஆக அதிகரித்துள்ளது, இன்னும் 9,44,996 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். இது மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் 14.60% ஆகும்.

கரோனா பலி எண்ணிக்கை விகிதம் 1.56% ஆக உள்ளது.

இந்தியாவின் கரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆகஸ்ட் 7-ல் 20 லட்சத்தையும் ஆகஸ்ட் 23-ல் 30லட்சத்தையும், செப்.5ம் தேதி 40 லட்சத்தையும் , செப்.16-ல் 50 லட்சத்தையும் செப்.28ம் தேதி 60 லட்சத்தையும் கடந்தது.

மொத்தமாக இதுவரை 7 கோடியே 78 லட்சத்து, 50 ஆயிரத்து 403 வைரஸ் டெஸ்ட்கள் நடந்துள்ளா, அக்டோபர் 2ம் தேதி மட்டும் 11 லட்சத்து, 32 ஆயிரத்து 675 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டன.

ஒரே நாளில் நேற்று 1069 பேர் மரணமடைந்ததில், மகாராஷ்டிராவில் 424 பேரும், கர்நாடகாவில் 125 பேரும், தமிழ்நாட்டில் 67 பேரும், உ.பி. மேற்கு வங்கத்தில் முறையே 53 பேரும், பஞ்சாபில் 50, டெல்லியில் 37, ம.பி.யில் 36, ஆந்திராவில் 31 பேரும் பலியாகினர்.

பலி எண்ணிக்கை மொத்தமாக 1,00,842 ஆனதில் மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 37,480 பேரும், தமிழ்நாட்டில் 9653 பேரும், கர்நாடகாவில் 9,119 பேரும், உ.பி.யில் 5,917 பேரும், ஆந்திராவில் 5,900 பேரும், டெல்லியில் 5,438 பேரும், மேற்கு வங்கத்தில் 5,070 பேரும், ப்ஞ்சாபில் 3,501 பேரும் குஜராத்தில் 3,475 பேரும் பலியாகியுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்