மகாத்மா காந்தியின் பிறந்த நாளான நேற்று, அநீதிக்கு தலைவணங்க மாட்டேன் என்ற அவரது கருத்தை ராகுல் காந்தி நினைவுகூர்ந்தார்.
உத்தரபிரதேசத்தில் 4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த இளம்பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க, நேற்று முன்தினம் தடையை மீறிச் செல்ல முயன்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை போலீஸார் தடுத்தனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் ராகுல் கீழே விழுந்தார். போலீஸார் தாக்கியதாகவும் ராகுல் குற்றம்சாட்டினார். இது தொடர்பாக ராகுல் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், மகாத்மா காந்தியின் பிறந்த நாளான நேற்று அவரது கருத்தை நினைவுகூரும் வகையில், ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்த உலகத்தில் யாருக்கும் நான் பயப்பட மாட்டேன். எந்த ஒரு அநீதியான செயலுக்கும் தலைவணங்க மாட்டேன். உண்மையின் சக்தியைக் கொண்டு பொய்யை தோற்கடிப்பேன். பொய்க்கு எதிரான போரில் அனைத்து தடைகளையும் எதிர்கொள்வேன். காந்தி பிறந்த நாளில் இதயபூர்வமான வாழ்த்துகள்” என பதிவிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago