கரோனா சிகிச்சையில் உள்ளவர்கள்;  தொடர்ந்து 11-வது நாளாக 10 லட்சத்துக்கும் குறைவு

By செய்திப்பிரிவு

தொடர்ந்து 11-வது நாளாக இந்தியாவில் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது, வெறும் 12 நாட்களில் 10 லட்சம் நபர்கள் குணமடைந்துள்ளனர்.

கோவிட்-19-ஐ கட்டுப்படுத்துவதில் மிகப்பெரிய சாதனையாக, தொடர்ந்து 11-வது நாளாக இந்தியாவில் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது.

இன்றைய நிலவரப்படி சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 9,42,217 ஆகும். வெறும் 12 நாட்களில் 10 லட்சம் நபர்கள் குணமடைந்துள்ளனர்.

கோவிட்-19 தொற்றில் இருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 78,877 நபர்கள் இந்தியாவில் குணமடைந்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து, தேசிய குணமடைதல் விகிதம் அதிகரித்து, 83.70 சதவீதமாக தற்போது உள்ளது. இது வரை 53,52,078 பேர் இந்தியாவில் குணமடைந்துள்ளனர்.

தற்போதைய பாதிப்புகளில் 76.62 சதவீதம் 10 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ளது. மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கையில் தற்போதுள்ள பாதிப்புகள் 14.74 சதவீதம் ஆகும்.

2.5 லட்சத்துக்கும் அதிகமான பாதிப்புகளோடு மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில், 1 லட்சத்துக்கும் அதிகமான பாதிப்புகளோடு கர்நாடகா உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

17 mins ago

இந்தியா

21 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்