பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை: வெற்றிகரமாக சோதனை

By செய்திப்பிரிவு

பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணையை இந்தியா இன்று வெற்றிகரமாக சோதனை செய்தது.

ஒடிசாவின் பால்சோர் மாவட்டத்தில், மொபைல் லாஞ்சர் மூலம், இன்று சோதனை வெற்றிகரமாக செய்யப்பட்டது. டிஆர்டிஓவின் பிஜே-10 திட்டத்தின் கீழ் இந்த சோதனை செய்யப்பட்டது. இந்த ஏவுகணை சோதனை செய்யப்படுவது இது இரண்டாவது முறையாகும்.

இந்த ஏவுகணையில் உள்ள ஏர் பிரேம் மற்றும் பூஸ்டர் ஆகியவை உள்நாட்டில் தயாரிக்கப்பட்டது. இந்த ஏவுகணை 400 கி.மீ., தூரத்தில் உள்ள இலக்கை தாக்கும் திறன் பெற்றது.

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறுகையில் ‘‘உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பூஸ்டர் மற்றும் ஏர்பிரேமுடன் பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்திய விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகள். இந்த வெற்றி இந்தியாவிற்கு ஊக்கமளிக்கும்.’’ எனக் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

14 mins ago

இந்தியா

17 mins ago

இந்தியா

51 mins ago

இந்தியா

43 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

46 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்