கர்நாடகா சட்ட மேலவைத் தேர்தல் தேதி: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

கர்நாடகா சட்ட மேலவை உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைந்ததை ஒட்டி கர்நாடகா சட்ட மேலவையின் நான்கு இடங்கள் 2020 ஜூன் 30 அன்று காலியானது.

இந்த நான்கு இடங்களில் இரண்டு பட்டதாரிகள் இடங்களும், மீதமிருக்கும் இரண்டு ஆசிரியர்கள் இடங்களும் ஆகும்.

கோவிட்-19 காரணமாக ஏற்பட்ட எதிர்பாராத சூழ்நிலைகளால், மேற்கண்ட இடங்களுக்கான தேர்தலை பின்னர் நடத்த முடிவு எடுக்கப்பட்டது.

தற்போது, கர்நாடக தலைமை தேர்தல் அலுவலர் அளித்த உள்ளீடுகளின் படி, இந்த இடங்களில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது.

இதன்படி தேர்தலுக்கான அறிவிப்பு 2020 அக்டோபர் 1 அன்று வெளியிடப்படும். வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி 2020 செப்டம்பர் 8 ஆகும். வேட்புமனுக்கள் 2020 செப்டம்பர் 9 அன்று பரிசீலிக்கப்படும். வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் 2020 செப்டம்பர் 12 ஆகும்.

2020 செப்டம்பர் 28-ஆம் தேதி தேர்தல் நடைபெறும். வாக்குகளின் எண்ணிக்கை 2020 நவம்பர் 2 அன்று நடைபெறும். தேர்தல் நடைமுறைகள் 2020 நவம்பர் 5 அன்று நிறைவு பெறும்.

தேர்தலுக்கான நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

36 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்