வேளாண் அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டபோது மத்திய அமைச்சராக இருந்த ஹர் சிம்ரத் கவுர் அமைச்சரவைக் கூட்டத்தில் அதனை எதிர்க்காதது ஏன் என பஞ்சாப் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான கேப்டன் அம்ரீந்தர் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம், வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா ஆகிய வேளாண் தொடர்பான 3 மசோதாக்களை மத்திய அரசு மழைக்காலக் கூட்டத்தொடரில் கொண்டு வந்தது.
இந்த மசோதாவுக்கு மக்களவையிலும், மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. மக்களவையில் மத்திய அரசுக்குப் பெரும்பான்மை இருப்பதால், எளிதாக நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவையில் இந்த மசோதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து விவாதத்தில் பங்கேற்றன. எனினும் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கிடையே மசோதாக்கள் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டன.
இந்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பாஜக கூட்டணியில் இருந்த அகாலிதளம் கட்சி வெளியேறியது. அக்கட்சியின் சார்பில் மத்திய அமைச்சராக இருந்த ஹர்சிம்ரத் கவுர் ராஜினாமா செய்தார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 3 வேளாண் மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்துள்ளார். நாட்டின் பல பகுதிகளில் இன்று விவசாயிகள் வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து பஞ்சாப் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான கேப்டன் அம்ரீந்தர் சிங் கூறியதாவது:
‘‘வேளாண் மசோதாக்கள் கொண்டு வரப்படுவதற்கு முன்பாகவே மத்திய அரசு அவசரச் சட்டமாக அமல்படுத்தியது. எந்தவொரு அவசரச் சட்டமும் அமைச்சரவையின் ஒப்புதலுக்கு பிறகே கொண்டு வரப்படும். அப்போது மத்திய அமைச்சராக இருந்த ஹர் சிம்ரத் கவுர் அமைச்சரவைக் கூட்டத்திலேயே இந்த மசோதாவை எதிர்திருக்கலாமே.
இப்போது பதவியை ராஜினாமா செய்துள்ளது. அரசியல் நாடகமே. விவசாயிகள் பிரச்சினையில் அரசியல் செய்வதை கைவிட்டு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து மத்திய அரசுக்கு எதிராக போராட வேண்டும்.’’ எனக் கூறினார்
முக்கிய செய்திகள்
இந்தியா
27 mins ago
இந்தியா
33 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago